உயிர் பலியை மறைக்கும் நாடுகள்: உலக சுகாதார அமைப்பு கண்டனம்

Updated : மார் 17, 2020 | Added : மார் 17, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

ஜெனிவா: கொரோனா தொற்று பரவல் குறித்து, ஜெனிவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளதாவது:



latest tamil news


நேற்றைய (16ம் தேதி) நிலவரப்படி, 151 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. கொரோனாவால், 6,606 பேர் பலியாகி உள்ளனர்; 1,67,511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

உலக அளவில் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. அதனால் தான் நாங்கள் எதிர்பார்த்ததை விட, அதிவிரைவாக கொரோனா பரவி வருகிறது.


latest tamil news





கண்களைக் கட்டிக்கொண்டு...


ஒரு சில நாடுகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த உண்மையான தகவலைத் தராமல் உள்ளனர். உயிர் பலி குறித்த தகவல்களையும் தருவது இல்லை. கண்களைக் கட்டிக்கொண்டு தீயை அணைக்க முடியாது. எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என, முழுவதுமாக அறியாமல், இந்த வைரஸ் பரவலை நாம் முடிவுக்குக் கொண்டு வர முடியாது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்று பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும். அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் ஒரே செய்தியைத்தான் சொல்கிறோம். 'சோதனை செய்யுங்கள்... சோதனை செய்யுங்கள்... சோதனை செய்யுங்கள்' என்பதுதான் அது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news




கொரோனா உயிரிழப்புகளின் உண்மை நிலவரத்தை, சில நாடுகள் தங்களிடமே மறைப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மை நிலவரம் தெரியவந்தால், உலகம், உச்சகட்ட அச்சத்தை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
24-மார்-202008:15:19 IST Report Abuse
Cheran Perumal சீனா சாவு எண்ணிக்கையை மறைக்கிறது என்று செய்தி வந்தபோதுதான் இவர் சீனாவுக்கு சர்டிபிகேட் கொடுத்தார். இவரெல்லாம் ஐநா வுக்கு சாபக்கேடு.
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
21-மார்-202023:07:14 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி சீனாவும் ஈரானும்தான் மறைக்கின்றன..
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
21-மார்-202018:57:40 IST Report Abuse
 nicolethomson ஒன்னும் செய்ய தெரியாத நீங்க இருந்தென்ன லாபம்? போயி தொலைங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X