தமிழ் பற்றிய கேள்விக்கு வாய்ப்பை மறுப்பதா?: ராகுல் கண்டனம்

Updated : மார் 17, 2020 | Added : மார் 17, 2020 | கருத்துகள் (102)
Share
Advertisement
congress, rahul, rahulgandhi, parliment, tamil, economy, devasted, cong, congmprahul, congmprahulgandhi, காங்கிரஸ், காங்எம்பிராகுல், ராகுல்காந்தி, காங், தமிழ், பார்லிமென்ட்

புதுடில்லி: பார்லிமென்டில், தமிழ் பற்றிய துணை கேள்வியை எழுப்ப அனுமதி வழங்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., காங்கிரஸ், எம்.பி.,க்கள் மாநில மொழிகள் குறித்து துணை கேள்விகள் கேட்க முயன்றனர். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி தரவில்லை. ஆனால், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் மட்டும் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ், என்.சி.பி., எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


பொருளாதார சீரழிவு


இதன் பின்னர் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: பெரிய சுனாமி ஒன்று வர உள்ளது என அரசை எச்சரிக்கிறேன். என்ன செய்வது என தெரியாமல் ஆட்சியாளர்கள் உள்ளனர். கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு மட்டும் இல்லாமல், வர உள்ள பொருளாதார சீரழிவை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இதனை நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். ஆனால், யாரும், எனது கருத்தை கேட்கவில்லை. அடுத்த 6 மாதத்தில், நமது மக்கள் கற்பனைக்கு எட்டாத வகையில், வேதனையை அனுபவிக்க போகின்றனர். பொருளாதார சீரழிவால் நாடு அவதிப்பட போகிறது.

வெளியாட்கள் சொல்வது பற்றி எனக்கு கவலையில்லை. உலக நாடுகளின் பொருளாதார தர மதிப்பீடு செய்யும் நிறுவனங்களான மூடிஸ், எஸ் அன்ட் பி ஆகியவை என்ன மதிப்பீடு செய்யும், அதிபர் டிரம்ப் என்ன நினைப்பார் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர். இதுபோன்ற மதிப்பீடுகளில் எனக்கு கவலையில்லை.


அவமானம்


தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் லோக்சபாவில் தமிழ் மொழியில் துணை கேள்விகள் கேட்க முயன்ற போது அவர்களுக்கு அனுமதி வழங்காமல் சபாநாயகர் செயல்பட்டது தமிழக மக்களை அவமானப்படுத்தியது போன்றதாகும். இது துனிப்பட்ட மனிதரான எனக்கு மட்டும் நேர்ந்த பிரச்னை அல்ல. தமிழக மக்களுக்கான பிரச்னை. அவர்களின் மொழி சார்ந்த பிரச்னை. அவர்களின் தாய்மொழியில் பேச அனுமதிக்கவில்லை. இது ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமானப்படுத்தியதாகும்.

தமிழக மக்கள் தங்களின் உரிமைகளை பாதுகாக்கவும், நம்பவும் பேசவும் உரிமை உள்ளது. என்னுடைய உரிமைகளை நீங்கள் பறிக்கலாம். ஆனால், தமிழக மக்களின் உரிமைகளை பறிக்க முடியாது. தமிழக எம்.பி.,க்களை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். ஆனால், தமிழக எம்.பி.,க்களை தமிழ் மொழியில் துணைக்கேள்விகளை கேட்க அனுமதிக்காமல் அவர்களின் உரிமைகளை சபாநாயகர் பறித்துவிட்டார். இந்த சபை அனைத்து மதங்களுக்கும், மொழிகளுக்கும் மாநிலங்களுக்கும் இடமளிக்கும் இடமாகும். இவ்வாறு அவர் கூறினார்.latest tamil news
கண்டனம்

மேலும், டுவிட்டரில் ராகுல் வெளியிட்ட பதிவு: தமிழை பற்றிய, துணைக்கேள்வியை எழுப்ப சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை. தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், பார்லிமென்டில் நடைமுறையில் உள்ள வழக்கமான நடைமுறைகள் மற்றும் பாரம்பரியத்தை புறக்கணித்ததற்கும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
18-மார்-202014:00:44 IST Report Abuse
Sridhar தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் வித்தியாசம் தெரியாத இவனெல்லாம் தமிழை பற்றி பேசுகிறான்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
18-மார்-202012:10:12 IST Report Abuse
Balaji வேற கேள்வியாயிருந்தா பரவால்லையா?
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
18-மார்-202007:48:49 IST Report Abuse
a natanasabapathy இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று குவித்துவிட்டு தமிழுக்கு வக்காலத்து வாங்குகிறாய் thamizhan ஏமாளி அல்ல காங்கிரஸ் தி மு க வில் இருப்பவன் தமிழன் அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X