பொது செய்தி

இந்தியா

சிறப்பாக செயல்படும் இந்தியா: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Updated : மார் 17, 2020 | Added : மார் 17, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
India,Coronavirus,Impressive, WHO,கொரோனாவைரஸ், இந்தியா, உலகசுகாதாரநிறுவனம்

புதுடில்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் பணிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ஹெங்க் பெகெதம், டில்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் ஹெங்க் பெகெதம் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் உயர்மட்டத்தில் இருந்து குறிப்பாக பிரதமர் அலுவலகமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது என கருதுகிறேன். இந்த நடவடிக்கைகள் மகத்தானது. எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களினால், இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.


latest tamil news


அனைத்து துறைகளையும் வைத்து வேலைவாங்கியது என்னை ஈர்த்துள்ளது.இந்தியாவில், சிறந்த ஆராய்ச்சி வசதி உள்ளது. ஐசிஎம்ஆர் உள்ளிட்டவை சிறப்பாக செயல்படுகிறது. அவர்களால், வைரசை தனிமைப்படுத்த முடியும். ஆராய்ச்சி சமுதாயத்தில் இந்தியா தொடர்ந்து செயலாற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
18-மார்-202012:09:25 IST Report Abuse
prakashc இந்திய நாட்டுக்கு வணக்கம். மோடி ஜி கிரேட்
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
18-மார்-202010:24:32 IST Report Abuse
Apposthalan samlin ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது காரணம் ஒன்னு வெயில் சாஸ்தி இந்த உஷ்ணத்தில் கொரோனவால் தாக்கு பிடிக்க முடியாது . காரணம் ரெண்டு இந்தியா வில் முக்காவாசி பேர் சரக்கு அடிக்கிறார்கள் சரக்கு கொரோனவை கொல்லும் . அதனால் தான் ஆல்கஹால் வைத்து கை கழுவ சொல்லுகிறார்கள். தமிழ் நாட்டில் நெருங்க முடியாது .
Rate this:
sankar - Nellai,இந்தியா
22-மார்-202020:26:11 IST Report Abuse
sankarகொரனவுலதான் உனக்கு முடிவு...
Rate this:
Cancel
chidambaram - Chennai,இந்தியா
18-மார்-202010:14:00 IST Report Abuse
chidambaram அண்ணண் இதுலயும் அரசியலா , இன்னும் கிராமத்து பக்கம் வாங்க இங்கே அப்படி ஒரு விழிப்புணர்வும் gov கொண்டுவரலே எல்லோரும் திருவிழா இலவச தண்ணீர் பந்தல்ன்னு ஓடிக்கிட்டுஇருக்கு எப்ப பெரிசா வருமோ தெரியிலே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X