அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மக்களிடம் மாற்றம் வந்தால் ரஜினி முதல்வராவது உறுதி' மன்றத்தினர் நம்பிக்கை

Updated : மார் 18, 2020 | Added : மார் 17, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
 'மக்களிடம், மாற்றம் ,வந்தால், ரஜினி, முதல்வராவது உறுதி,  மன்றத்தினர்,நம்பிக்கை

ரஜினி எதிர்பார்க்கும் மாற்றம் உருவானால், அவர் நிச்சயம் முதல்வர் ஆவார்' என, அவரது மன்ற நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'அரசியலில் மாற்றம் வர, மக்கள் மத்தியில் மாற்றம் வர வேண்டும்; அப்போது தான், நான் அரசியலுக்கு வருவதற்கு, ஒரு அர்த்தம் இருக்கும்' என, கூறியுள்ள ரஜினி, மக்களிடையே அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த, சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தற்போதுள்ள, அரசியல் சூழ்நிலையில், மாற்றத்தை துவக்க வேண்டியதுமக்களே; அதற்கு, அவர்களை தயார்படுத்த, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள், தமிழகத்தின் பல பகுதியிலும் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.அதன்படி, சென்னை, வியாசர்பாடி அருகே, மகாகவி பாரதியார் நகரில், 'ரஜினியின் பார்வையில், அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்' என்ற தலைப்பில், மாரிதாஸ் என்பவர் பேசியதாவது:ரஜினி பேசியதை, நன்றாக கவனிக்க வேண்டும். 'முதல்வர் பதவிக்குஆசையில்லை' என்று தான் கூறியுள்ளார். 'அரசியலுக்கு வரவே மாட்டேன்' என, கூறவில்லை.

இங்கு, யார் முதல்வர் என்பதில், பிரச்னை இல்லை. மொத்த, 'சிஸ்டமும்' கெட்டுப் போய் உள்ளது என்பது தான், ரஜினியின் வேதனை.நாட்டின் இப்போதைய தேவை என்ன; அரசியல், ஆட்சி மாற்றத்திற்கான தேவை என்ன என்பதை, மக்கள் உணர வேண்டும். அப்போது தான், அரசியலுக்கு வருவதற்கு அர்த்தம்இருக்கும் என்பது, ரஜினியின் எதிர்பார்ப்பு.

அரசியல் மாற்றத்திற்கான அதிர்வை உருவாக்க வேண்டும். அதை செய்யாமல், அவர் அரசியலுக்கு வந்தால், நாமும் மற்ற கட்சிகள் போலாகி விடுவோம்; அதில் ரஜினிக்கு விருப்பமில்லை.ஆரோக்கியமான அரசியலுக்கு, ரஜினி முன்வந்துள்ளார்.ஆனால், இங்கு மக்கள் மனதையே மாற்றி வைத்துள்ளனர்.

ரஜினி கூறும், அந்த நல்ல விஷயம் நடக்காது என்பதை, மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்து உள்ளனர். இங்குள்ள அரசியல்வாதிகள், மக்கள் அனைவரையும், ஊழலில் தள்ளி விட்டனர். இவ்வாறு, அவர் பேசினார்.

இதேபோல், ஒவ்வொருமாவட்டத்திலும், மக்களைசந்தித்து, ரஜினி மக்கள் மன்றத்தினர் பேசி வருகின்றனர். அதுகுறித்து, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த, நாமக்கல் மாவட்ட செயலர், அரங்கண்ணல்என்பவர், ''ரஜினி நிச்சயம், முதல்வர் ஆவார்,'' என்றார்.

திண்டுக்கல் மாவட்ட செயலர், பட்டிவீரன் என்ற ரகு கூறுகையில், ''ரஜினியின் கருத்துக்கு, நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது,'' என்றார்.சிவகங்கை மாவட்ட செயலர், ராமேஸ்வரன், ''ரஜினியின் கருத்தை, மக்களிடம் எடுத்துச் செல்ல, ஏராளமான இளைஞர்களை, மன்றத்தில் இணைத்து வருகிறேன்,'' என்றார்.புதுக்கோட்டை மாவட்ட செயலர், கே.கே.முருகபாண்டியன் கூறுகையில், ''ரஜினியின் கருத்தை, முடிந்தளவு மக்களிடம் சேர்ப்போம்,'' என்றார்.

-- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
19-மார்-202001:03:54 IST Report Abuse
Dr Kannan என்னடா இந்த அரசிலுக்கு வந்த சோதனை மாற்றத்தை உருவாக்குவது தான் தலைவனின் திறமையும் அறிவுடைமையும். ஆனால் மகா சஙகி ரஜினி சன்னிதானத்தில் மாற்றம் வந்தால் தலைமை பின்னாலே வருமாம் பரமர்தச குருவும் சிதிடர்களின் கதை தான் நினைவிற்கு வருகிறது. நதியை கடப்பதற்கு பயந்துகொண்டு, நதி தூங்குகிறதா அல்லது விழித்துஇருக்கிறதா என்று துகிலுக் அறிவாளி சீடர்கள் அறிய விரும்பினார்கள் எனவே எரியும் கொல்லி கட்டையை நதிநீரில் மூழ்க செத்தபோது நெருப்பு வூஸ் என்ற ஒலியுடன் அணைந்துவிட்டது ...ஆகா நதி விழித்துக்கொண்டுதான் இருக்கிறது என்று அந்த அறிவாளிகள் நினைத்து நதியை கடக்கும் திட்டத்தை கைவிட்டார்களாம் ,,தலைவரும் தொண்டர்களும் சரியான துக்ளக் அறிவாளிகள்
Rate this:
Cancel
இருங்கடா - Kitchener,கனடா
18-மார்-202021:35:06 IST Report Abuse
இருங்கடா இவர் வேறு.... வாடகைசைக்கிள்... சைக்கிள குறுக்க நெடுக்க போய்கிட்டு, ஓரமா போய் விளையாடுங்க தாத்தா
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
18-மார்-202019:52:35 IST Report Abuse
மனிதன் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துபவன்தான் தலைவன்...மக்களிடம் எழுச்சி ஏற்பட,ராப்பகலாக உழைப்பவன்தான் தலைவன்... மக்களின் பிரச்சினைகளுக்காக வீதிக்கு வந்து போராடுபவன்தான் தலைவன்...ஆனால் தன்னெழுட்சியாக, தங்கள் உரிமைக்காக போராடும் மக்களையே தேசவிரோதி என்பவர் இவர்...தொட்டதற்கெல்லாம் போராட்டம் என்றால் தமிழ்நாடு உருப்படாது என்றவர் இவர்...தங்கள் உரிமைக்காக மக்கள் போராடக்கூடாதாம்...,ஆனால் இவருக்காக மட்டும், மக்களுக்கு எழுட்சி ஏற்பட வேண்டுமாம்...??? அப்போது வந்து நோகாமல் நோம்பி கும்பிடுவாராம்...??? அய்யா சாமி,மக்களுக்கு மாற்றம் வந்தால் உங்களை எல்லாம் ஏன் தேர்வு செய்ய வேண்டும்??? அய்யா "நல்லகண்ணு" போன்ற தன்னலமில்லாத மனிதர்களை தேர்வு செய்வார்களே...மக்களிடம் மாற்றம் வேண்டும்தான்.., ஆனால் அது உங்களைப்போன்றோருக்காக அல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X