சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

உள்குத்து துரைமுருகன்!

Added : மார் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 உள்குத்து துரைமுருகன்!

உள்குத்து துரைமுருகன்!

சட்டசபையில் சமீபத்தில், கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன், ''நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு, தற்போது, அதிகம் பேர் வருகின்றனர்; ஆனால் அங்கு, தங்கும் விடுதி எதுவும் இல்லை. எனவே, அரசு தரப்பில், தங்கும் விடுதி கட்ட வேண்டும். அதேபோல், ஏலகிரியிலும் தங்கும் விடுதி கட்ட வேண்டும். விடுதி கட்டினால், மாவட்ட அமைச்சரின் ஓட்டல் வருமானம் பாதிக்கக் கூடும்,'' என்றார்.உடனே, துணை முதல்வர், பன்னீர்செல்வம், பின் வரிசையில் அமர்ந்திருந்த, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, அமைச்சர், வீரமணியை திரும்பிப் பார்த்தார்.உடனே, துரைமுருகன், ''அவர் ஓட்டல் வைத்திருப்பது, துணை முதல்வருக்கு தெரியாதா?'' எனக் கேட்க, சபையில் சிரிப்பலை எழுந்தது. இதை கேட்டதும், அமைச்சர், வீரமணி நெளிந்தார்.பார்வையாளர் ஒருவர், 'உள்குத்துல, துரைமுருகனை அடிச்சுக்க ஆளே இல்லப்பா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-மார்-202006:22:22 IST Report Abuse
D.Ambujavalli எல்லா அமைச்சரும் இதே போலத்தான் இவர் மட்டும் என்ன வாழ்ந்தார்? நீர் உறிஞ்சும் சேவையில் கொழித்ததும் மகனுக்காக வாரி இறைத்ததும் வியர்வை சிந்தி உழைத்த பணமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X