பொது செய்தி

இந்தியா

'கொரோனா' காரணமாக வெறிச்சோடிய திருமலை

Updated : மார் 18, 2020 | Added : மார் 18, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

திருப்பதி : 'கொரோனா' பயம் காரணமாக, பக்தர்கள் கூட்டம் இல்லாததால் திருமலை வெறிச்சோடியுள்ளது.



latest tamil news



திருமலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முதல் நேரடி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 50 பேருக்கு மேல் கூட்டம் சேராமல், தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்பி வருகின்றனர். இதனால், பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருமலை வெறிச்சோடியுள்ளது.

திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகம், சாலை போக்குவரத்து கழக பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் நேரடி தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்ட கவுண்டர்களில் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்து நேரடி தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.


latest tamil news




கிருமிநாசினி தெளிப்பு


திருமலையில், பக்தர்கள் கைப்படும் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி மருந்துகளை தேவஸ்தான ஊழியர்கள், 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தெளித்து வருகின்றனர். தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்துஊழியர்களும், கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
18-மார்-202015:15:29 IST Report Abuse
chakra இப்போ ஒரு பயல் மசூதி கட்டுறேன் ராமர் கோயில் கட்டுறேன்னு சொல்லட்டுமே பார்ப்போம்
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
18-மார்-202011:28:19 IST Report Abuse
 Sri,India கோவில்களில் கூட கட்டுப்பாடு விதிக்கும் நாம் நோய் பரப்பும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ளோம் . தமிழனுக்கு சாவு வேறெங்கும் இல்லை ...டாஸ்மாக் ஒன்றே போதுமே??
Rate this:
Cancel
SELF -  ( Posted via: Dinamalar Android App )
18-மார்-202011:01:04 IST Report Abuse
SELF அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு. எங்க போனாலும் ஒரே கூட்டம் பஸ்ல போனா அக்கூட்டம் ட்ரெயின்ல போனால் கூட்டம் இதுல பாதி பேரு நாகரீகம் தெரியாம குடித்து விட்டு வருவான் சிகரெட் வாசனையோட வருவான் . இப்பதான் நிம்மதியா இருக்கு. கரோனா க்கு நன்றி
Rate this:
Sri,India - India,இந்தியா
18-மார்-202011:36:01 IST Report Abuse
 Sri,Indiaஹா ஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X