'ஐ.எஸ்., அமைப்பை நம்பி ஏமாந்தேன்': ஆப்கன் சிறையில் கேரள பெண் உருக்கம்

Updated : மார் 18, 2020 | Added : மார் 18, 2020 | கருத்துகள் (138) | |
Advertisement
கோழிக்கோடு: ''ஒழுக்கமான மார்க்கத்திற்கு வழி காட்டுவர் என நம்பி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து ஏமாந்தேன்,'' என, கேரளாவைச் சேர்ந்த, ஆயிஷாவின் உருக்கமான 'வீடியோ' ,சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.கேரளாவைச் சேர்ந்த, அப்துல் ரஷீத் அப்துல்லாவும், அவர் மனைவி ஆயிஷாவும், 'ஷரியா' மார்க்க நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற விரும்பி, 2016ல், ஆப்கன் சென்று, ஐ.எஸ்.,
ISIS,women,Afghanistan,Kerala,women,ஐஎஸ்,ஏமாந்தேன்,ஆப்கன், சிறை,கேரள_பெண்

கோழிக்கோடு: ''ஒழுக்கமான மார்க்கத்திற்கு வழி காட்டுவர் என நம்பி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து ஏமாந்தேன்,'' என, கேரளாவைச் சேர்ந்த, ஆயிஷாவின் உருக்கமான 'வீடியோ' ,சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த, அப்துல் ரஷீத் அப்துல்லாவும், அவர் மனைவி ஆயிஷாவும், 'ஷரியா' மார்க்க நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற விரும்பி, 2016ல், ஆப்கன் சென்று, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, ஐ.எஸ்., வழிமுறைகள் இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், ஆயிஷா, கேரளாவைச் சேர்ந்த இருவருடன், ஆப்கன் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் காபூல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், ஆயிஷாவின் வீடியோ பதிவை, ஐ.எஸ்.,ஸ்ட்ரட்நியூஸ் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஆயிஷா கூறியிருப்பதாவது: 'அல்லா'வின் ஆட்சியின் கீழ், இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளை பின்பற்றும் நோக்கத்தில், கேரளாவில் இருந்து வெளியேறி ஆப்கன் சென்று, ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்தோம். ஆனால், அங்குள்ளோர், மசூதிக்கு சென்று தொழும் இஸ்லாமிய கடமையை கூட நிறைவேற்றுவதில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். என் கணவரும் ஏமாற்றம் அடைந்தார்.

அதனால், அவர் ஐ.எஸ்., தொடர்பான படக்காட்சிகளை எடுத்து, வலைதளங்கள் மூலம், ஐ.எஸ்., அமைப்பில் ஆட்களை சேர்ப்பதை நிறுத்திக் கொண்டார். அவர், இந்தியா வருவது குறித்து எதுவும் கூறவில்லை. நான் கேரளாவிற்கு வந்து, என் கணவரின் குடும்பத்தாருடன் வசிக்க விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

வீடியோவில், ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, பாத்திமா என்ற பெண்ணும், இந்தியா திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார். ''என்னை யாரும் சிறையில் வைத்து, சித்ரவதை செய்யவில்லை. அவர்கள் ஆட்சிமுறை தவறு என, நான் கூற மாட்டேன். இங்கு எல்லாம் மாறி விட்டது. அதனால், இந்தியா திரும்ப விரும்புகிறேன்,'' என, பாத்திமா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (138)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
23-மார்-202010:55:52 IST Report Abuse
Jaya Ram இவர்களை எல்லாம் இந்திய திரும்ப அனுமதிக்கக்கூடாது இந்நாடு வேண்டாம் என்று போனவர்கள் இங்கு ஏன் வரவேண்டும் அவர்கள் சம்பந்தப்பட்ட அரசு தார்த்தவேஜிக்கல் , கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் அழித்துவிடவேண்டும் இதை கேரளா அரசு செய்யுமா? செய்யாது ஏனெனென்றால் அவர்கள்தான் இவர்களின் கைக்கூலிகளாயிற்றே
Rate this:
Cancel
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-202008:48:37 IST Report Abuse
மனிதன் அவர்கள் ஆட்சி முறையை தவறன்று கூறவில்லை இதிலிருந்தே தெரிகின்றது இன்னும் உங்களைப் போன்றவர்களை கொண்டு எந்த பாதக செயலும் செய்ய இன்னும் தயாராகவே இருக்கின்றார்கள் என்று நீ இப்பவும் விஷத்தோடுதான் இருக்கின்றாய் ஆகவே உன்னை வெளியில் விடுவது தவறு மோதலில் உண் குழந்தையை உன்னிடம் இருந்து பிரித்து அதையாவது நல்வழியில் வளரவிடவேண்டும் அரசாங்கம்
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
19-மார்-202020:50:45 IST Report Abuse
Indian  Ravichandran இந்திய திரும்ப அனுமதிக்கக்கூடாது இது கொரோனாவைவிட கொடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X