பொது செய்தி

இந்தியா

ரூ.1,052 கோடி சொத்துக்கள் முடக்கம்: நிர்மலா

Updated : மார் 18, 2020 | Added : மார் 18, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
Nirmala,NirmalaSitharaman,RajyaSabha,நிர்மலா,நிர்மலாசீதாராமன்,ராஜ்யசபா

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.1,052 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: நடப்பு, 2019- - 20ம் நிதியாண்டில், ஏப்., - ஜன., வரை, வருமான வரித்துறை, 893 நிறுவனங்களில் நடத்திய சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பாக, 1,052.79 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த, 2018 -- 19ம் நிதியாண்டில், 983 நிறுவனங்களில் சோதனை நடத்தி, 1,584 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன.


latest tamil news



வரி ஏய்ப்பு குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரி ஏய்ப்பு தொடர்பான புகார்கள் வரும்போது எல்லாம், சட்டத்துக்கு உட்பட்டு சோதனை, பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வருமான வரித்துறை விசாரணைக்கு உள்ளாகும் நபர்களின் தகவல்களை வெளியிட, வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 138 விலக்களிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மார்-202017:09:49 IST Report Abuse
Bhaskaran கொரானாவினால் முறைசாரா தொழிலாளர் பாதிக்கப்படறாங்க முதலில் அவிங்களுக்கு நிவாரணம் ஏதாவது கொடுங்க தாயே
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
18-மார்-202019:58:02 IST Report Abuse
m.viswanathan சும்மா அள்ளி விட வேண்டியதது தான் புள்ளி விவரங்களை
Rate this:
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி இந்த அம்மாவின் பதிவை போட்டதுமே டுபாக்கூர் பொருளாதார மேதைகள் இவரை ஒரு கை பார்த்து விடுவார்கள். எங்கே அவர்களை காணோம். கரோனா பாதிப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X