பெங்களூருவில் தர்ணா: திக்விஜய் சிங் கைது

Updated : மார் 18, 2020 | Added : மார் 18, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
பெங்களூரு, திக்விஜய்சிங், காங்கிரஸ், கமல்நாத், மத்தியபிரதேசம், மபி, தேர்தல், கைது, தர்ணா

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: பெங்களூருவில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க அனுமதி கேட்டு, ஓட்டல் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. மூத்த தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா, கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். அதையடுத்து அவருடைய ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதில், 6 பேரின் ராஜினாமாவை சபாநாநயகர் பிரஜாபதி ஏற்று கொண்டார். இதனால் முதல்வர் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 22 பேரும், பெங்களூருவில் உள்ள ரமடா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பெங்களூரு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து ஓட்டல் வாசல் முன் திக்விஜய் சிங் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ம.பி.,யில் ராஜ்யசபா வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டுள்ளேன். வரும் 26ல் தேர்தல் நடக்க உள்ளது. எங்களது எம்.எல்.ஏ.,க்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்னுடன் பேச விரும்புகின்றனர். அவர்களிடம் இருந்து போன் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களை சந்திக்க போலீசார் அனுமதி வழங்கவில்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறினார். அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் என்னை சந்திக்க விரும்புகின்றனர். ஆனால், போலீசார் அனுமதி மறுப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார், திக்விஜய் சிங்கை கைது செய்து அம்ருதல்லி போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்றனர்.


latest tamil news



அப்போது திக்விஜய் கூறுகையில், அவர்கள் திரும்பி வருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் பிடித்து வைத்துள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 5 எம்.எல்.ஏ.,க்களிடம் பேசினேன். தங்களது போன்கள் பறிக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் அறை முன்பும் போலீசார் உள்ளனர். அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
18-மார்-202019:37:31 IST Report Abuse
konanki திக் விஜய் சிங் ப சிதம்பரம் கபில் சிபில் பப்பு போன்ற காங்கிரஸ் "தலைவர்கள்"இருக்கும் வரை பாஜக வின் வளர்ச்சிக்கு தடையே இல்லை.
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-மார்-202017:21:17 IST Report Abuse
Yaro Oruvan திக்கு விஷ சிங்கு கொஞ்ச நாளா கம்முன்னு இருந்தாப்ல.. இந்த வயசுல கூட வக்கீல் வேல பாத்த பொம்பளைய அபேஸ் செஞ்சி கல்யாணம் செஞ்சவனாச்சே... தேனிலவு முடிஞ்சு போச்சா பெருசு? மறுபடியும் கூவ ஆரம்பிச்சுட்ட?
Rate this:
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
18-மார்-202016:59:45 IST Report Abuse
Divahar உலக அரசியலில் இதுமாதிரி ஜனநாயக சீரழிவுகள் எந்த நாட்டிலும் நடக்காது. ஜனநாயகத்திற்கு கேவலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X