பொது செய்தி

இந்தியா

கூட்டம் குறைந்த ஷாஹீன் பாக் கூடாரம்

Updated : மார் 18, 2020 | Added : மார் 18, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லியின் ஷாஹீன் பாக்கில் நடந்து வரும் போராட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கூட்டம் குறைந்து காணப்படுகிறது.



latest tamil news


'குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடந்து வந்தது. பல நாட்களாக நடந்து வந்தது. இந்த போராட்டம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பதாக வந்த புகாரை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் பேச்சு நடத்த, உச்சநீதிமன்றத்தால் சமரசக் குழு நியமிக்கப்பட்டது.

சமரச குழுவில் இடம்பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் சாதனா ராமச்சந்திரன், சஞ்சய் ஹெக்டே ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினர். இதற்கிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டில்லியில் உடற்பயிற்சி கூடங்கள், இரவு கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட, மக்கள் கூடும் இடங்கள், அரசு உத்தரவின்படி மூடப்பட்டு உள்ளன.


latest tamil news


மேலும் மதம், சமூகம், கலை மற்றும் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்தவும், 50 பேருக்கு மேல் மக்கள் ஒன்று கூடவும், மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் 3 மாதங்களுக்கு மேலாக ஷாஹீன் பாக்கில் தொடர்ந்து வரும் போராட்டத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில பேர் மட்டுமே அங்குள்ள கூடாரத்தில் கூடியதால், போராட்டக்களம் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
19-மார்-202006:56:36 IST Report Abuse
Ambika. K அதெல்லாம் இல்லை இலவச பிரியாணி பாக்கெட்டும் மினரல் வாட்டர் இல்லை என்றதும் கூட்டமும் இல்லை எதிர்ப்பும் இல்லை
Rate this:
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
19-மார்-202005:02:49 IST Report Abuse
sankar .... ஒரு கையில் வாள் ஏந்தி எல்லாவற்றையும் மாற்றிவிடுவதாய் வாய் சவடால் விட்டவனை ... கொரானாவுக்கு பதில் சொல்ல சொல்லுங்கள் ....
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
18-மார்-202021:08:29 IST Report Abuse
Sivagiri இயற்கையே பெரியவன் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X