கொரானாவை வெல்வோம்

Updated : மார் 18, 2020 | Added : மார் 18, 2020
Share
Advertisement
நேற்று வரை கொரானா வெளிநாட்டின் அபாயச் செய்தியாக இருந்தது இன்று நம்மை அச்சுறுத்தும் செய்தியாகியுள்ளது.நம்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு அதிர்ச்சியோடுதான் விடிகிறது கவலையோடுதான் முடிகிறது.எவ்வளவோ புயல் மழை சுனாமி வந்த போது கூட மனதில் நம்பிக்கையோடு இருந்த நாம் இப்போது ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்திற்குள் தள்ளிவிடப்பட்டு



latest tamil news


நேற்று வரை கொரானா வெளிநாட்டின் அபாயச் செய்தியாக இருந்தது இன்று நம்மை அச்சுறுத்தும் செய்தியாகியுள்ளது.


latest tamil news



நம்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு அதிர்ச்சியோடுதான் விடிகிறது கவலையோடுதான் முடிகிறது.


latest tamil news


Advertisement


எவ்வளவோ புயல் மழை சுனாமி வந்த போது கூட மனதில் நம்பிக்கையோடு இருந்த நாம் இப்போது ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்திற்குள் தள்ளிவிடப்பட்டு உள்ளோம்.இத்தனைக்கும் பயப்படும்படியாக எதுவும் நடந்துவிடவில்லை,நடக்கவும் கூடாது.


latest tamil news



தியேட்டர்கள் மால்கள் பெரும் வணிக வளாகங்கள் என்று ஒவ்வொன்றாக மூடிக்கொண்டே வருகின்றனர் இது தற்காலிகம் என்றாலும் இங்கு பணிபுரிபவர்களின் நிலமைதான் கவலைக்குள்ளாகி இருக்கிறது வேலை பார்த்தால் சம்பளம் என்று இருந்தவர்கள் நிலமை இன்னும் பரிதாபத்திற்குள்ளாகி உள்ளது.


latest tamil news



வீட்டில் மக்கள் முடங்கிக் கிடப்பதால் பொதுமக்களை நம்பி பிழைக்கும் ஆட்டோ ரிக்சா போன்றவைகளை ஒட்டிப்பிழைக்கும் தொழிலாளர்கள் நிலமை சொல்லமுடியாத சோகத்திற்கு உள்ளாகி இருக்கிறது.இவர்களை மக்களும் அரசும் ஆதரிக்கும் வகையில் ஏதாவது அறிவிப்பு வெளியிடவேண்டும்.


latest tamil news



துணை ஜனாதிபதி வெங்கையாவே ஆனாலும் கொஞ்சம் நில்லுங்கய்யா என்று சொல்லி தெர்மல்மீட்டரில் அவரையும் சோதித்துவிட்டே பாராளுமன்றத்திற்குள் அனுமக்கின்றனர்.
அதே நேரத்தில் இது போன்ற மக்களுக்கு உதவக்கூடிய மருத்துவக்கருவிகளையும் பொருட்களையும் அதிக விலைக்கு விற்பதும் பதுக்குவதும் எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை அரசு தலையிட்டு இது போன்ற பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும்


latest tamil news




இந்தச் சோதனைக்கருவிகளை நீட்டியபடி நிற்பவர்களைத்தான் இப்போது எங்கும் பார்க்கமுடிகிறது அதிலும் சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்களுக்கு பெரிய சல்யூட். வழிபாட்டுத் தலங்களே இங்கே வருவதை தவிருங்கள் என்று சொல்லும் நிலமையில், காய்ச்சல் இருமல் சளி என்று இருந்தால் தாமதிக்காமல் உடனே எங்களிடம் வாருங்கள் என்று சொல்லும் இவர்கள்தான் நமக்கிருக்கும் ஒரே ஆறுதல்.


latest tamil news


இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே இதை பஞ்சாங்கம் சொல்லியுள்ளது என்பது போன்ற தமாசுகளும்,ஒரே ஓரு மடக்கு மூலிகைச் சாறு ஒடியே போயிடும் என்பது போன்ற ஏமாற்றுத்தன செய்திகளையும் தவிர்த்து சமூகதளங்களில் மக்களுக்கு நன்மை தரக்கூடிய நம்பிக்கை தரக்கூடிய பாசிடிவான தகவல்கள் இருந்தால் மட்டும் பகிருங்கள் அதுதான் உத்தமம்.
எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X