காங்.,கின் திக்விஜய் சிங்கை சந்திக்க அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மறுப்பு

Updated : மார் 20, 2020 | Added : மார் 18, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 காங்.,கின், திக்விஜய் சிங்கை, சந்திக்க,அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்,மறுப்பு

பெங்களூரு :'சுய விருப்பத்தின் படிதான், நாங்கள் பெங்களூரு வந்துள்ளோம்; காங்கிரஸ் மூத்த தலைவர், திக்விஜய் சிங்கை சந்திக்க, நாங்கள் விரும்பவில்லை' என,மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தில், முதல்வர், கமல்நாத் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், 26ம் தேதி, மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது.இதில், காங்கிரசும், பா.ஜ.,வும், தலா ஒரு இடத்தை எளிதில் கைப்பற்றிவிடும். மூன்றாவது இடத்தைப் பிடிக்க, இந்த இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.


ராஜினாமாஇந்நிலையில், இம் மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலராக இருந்தவருமான, ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 22 பேர், கடந்த வாரம், கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு வந்தனர்; சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.அடுத்து, சிந்தியா, காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார். பெங்களூரில் தங்கியுள்ள, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 22 பேரும், தங்கள் எம்.எல்.ஏ., பதவி யை ராஜினாமா செய்து, கவர்னர், லால்ஜி டாண்டன் மற்றும் சபாநாயகர், என்.பி.பிரஜாபதிக்கு, கடிதங்களை அனுப்பி வைத்தனர்.

இவர்களில், ஆறு அமைச்சர்களும் அடங்குவர்.அவர்களின் ராஜினாமாவை மட்டும், சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, கமல்நாத் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறப்பட்டது. மொத்தம், 230 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.


ஒத்திவைப்புகாங்கிரசுக்கு, 113 உறுப்பினர்களும், பா.ஜ.,வுக்கு, 107 உறுப்பினர்களும் உள்ளனர். 22 எம்.எல்.ஏ.,க் களின் ராஜினாமாவால், காங்கிரசின் பலம், 91 ஆக குறைந்துவிட்டது. சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, கவர்னர், டாண்டன்உத்தரவிட்டார்.

எனினும், 16ம் தேதி, சபை கூடிய போது, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், சபை, 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சமாதானம் செய்யும் முயற்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக, ம.பி., முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங், கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு, நேற்று வந்தார்.

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்றார். ஆனால், உள்ளே செல்ல, அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, திக்விஜய் சிங், போராட்டத்தில்ஈடுபட்டார்.அப்போது அவர், ''காங்., - எம்.எல்.ஏ.,க்களை சந்திப்பது என் உரிமை. அவர்களை சந்திக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன்,'' என்றார்.

திக்விஜய் சிங் தடுத்து நிறுத்தப்பட்டது பற்றி, ம.பி., முதல்வர் கமல்நாத், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியதாவது:பெங்களூரில், எங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க விடாமல், திக்விஜய் சிங்கை, போலீசார் தடுத்து நிறுத்தியது, சர்வாதிகாரத்தனமானது. தேவைப்பட்டால், பெங்களூருக்கு நானே செல்வேன்.


பலனில்லைமக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை, நிலையற்றதாக்கி, பா.ஜ., ஜனநாயக படுகொலை செய்வதை, நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை, பா.ஜ., தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு, கமல்நாத் கூறியுள்ளார். இதற்கிடையில், 'திக்விஜய் சிங்கை சந்திக்க, நாங்கள் விரும்பவில்லை' என, காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர். அவர்களில் சிலர், 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:நாங்கள், சுயவிருப்பத்தின் பேரில் தான், பெங்க ளூருக்கு வந்துள்ளோம். எங்களை யாரும் கடத்த வில்லை; சிறை வைக்க வும் இல்லை. கடந்த ஓராண்டாக, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரிடம் பேச முயற்சித்தோம். பலனில்லை. இப்போது, எதற்காக பேச விரும்புகின்றனர். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


சபாநாயகருக்குகவர்னர் பாராட்டுஆறு அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதற்காக, மத்திய பிரதேச சட்டசபைசபாநாயகர், பிரஜாபதிக்கு, கவர்னர், லால்ஜி டாண்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, சபாநாயகருக்கு, கவர்னர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஆறு அமைச்சர்கள், தங்கள் எம்.எல்.ஏ.,பதவியை ராஜினாமா செய்ததை, எந்த பாரபட்சமும் இன்றி, நீங்கள் ஏற்றுக் கொண்டதுபாராட்டத்தக்கது.

எம்.எல்.ஏ.,க்கள், 16 பேர் மாயமாகியுள்ளதாக, நீங்கள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளீர்கள். அவர்கள், எனக்கும், உங்களுக்கும், கடிதங்கள் எழுதியுள்ளனர். தாங்கள் கஷ்டத்தில் இருப்பதாக, அவர்கள் தெரிவிக்கவில்லை. 'டிவி' சேனல்கள், செய்தி தாள்கள், சமூக வலை தளங்களில், அவர்களின் கடிதங்கள், பேட்டிகள், தொடர்ந்து வெளியாகி வருகின்றன. எம்.எல்.ஏ.,க்களின் பாதுகாப்பு பற்றி கேட்டுள்ளீர்கள். இது பற்றி, மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு, கவர்னர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-மார்-202017:08:44 IST Report Abuse
Endrum Indian காங்.,கின் திக்விஜய் சிங்கை சந்திக்க அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மறுப்பு???அதாவது கரோனாவை சந்திக்க மறுப்பு???
Rate this:
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
19-மார்-202010:12:52 IST Report Abuse
Divahar உலகிலேயே மிக சிறந்த ஜனநாயகத்தை (?) இந்தியாவில் தான் பார்க்க முடியும். ஒரு கட்சி சார்பில் போட்டி போட்டு பதவிக்காக/வருமானத்திற்காக கூண்டோடு வேறு இடத்திற்கு தாவுவது இந்தியாவில் மட்டுமே. தேசபக்தர்கள் (?) ஜனநாயக வியாபாரத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். பொருளாதாரம் தான் முன்னேறவில்லை
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
19-மார்-202006:15:41 IST Report Abuse
 Muruga Vel திக் விஜய் தனியாக சென்றிருக்க கூடாது ..
Rate this:
Rajan - Alloliya,இந்தியா
19-மார்-202009:25:08 IST Report Abuse
Rajanஅவரது இளம் சென்றுள்ளார்...
Rate this:
blocked user - blocked,மயோட்
19-மார்-202019:38:46 IST Report Abuse
blocked user"அவரது இளம்" - சுவடே இல்லாமல் கத்தரிப்பூ செய்கிறார்கள்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X