அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்து திட்டம்: முதல்வர் இ.பி.எஸ்., பெருமிதம்

Added : மார் 18, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 குடிமராமத்து திட்டம்: முதல்வர் இ.பி.எஸ்.,  பெருமிதம்

சென்னை : ''தமிழகத்தில், குடிமராமத்து திட்டம், மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளையும், இத்திட்டத்தில் துார்வார, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - தங்கம் தென்னரசு: மாநிலம் முழுவதும், ஐந்து ஒப்பந்ததாரர்கள் மட்டுமே, சாலைப் பணிகளை செய்கின்றனர்.
மற்ற ஒப்பந்ததாரர்களுக்கு, பணிகள் தர மறுப்பது ஏன்?முதல்வர்: 'இ - டெண்டர்' வழியே ஒப்பந்தம் விடப்படுகிறது. தகுதியுள்ளவர்கள், யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். குறைவான தொகைக்கு ஒப்பந்தம் கேட்பவருக்கு, பணி வழங்கப்படுகிறது. டெண்டர் கேட்பவர் யார் என்பதே தெரியாது.
தங்கம் தென்னரசு: முதல்வர் கோபக்காரர் என்பது தெரியும். நகைச்சுவையும் அதிகம் என்பது, 'டெண்டர் போடுவது, யார் என்பதே தெரியாது' என, அவர் கூறுவதில் இருந்து புரிகிறது.

முதல்வர்: தி.மு.க., ஆட்சியில், ஒரே நபர் ஒப்பந்தப்புள்ளி கொடுத்து, அவரே பணி எடுப்பார். அதுபோன்ற நிலை, தற்போது கிடையாது. ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்ட பின் தான், யார் டெண்டர் எடுத்துள்ளார் என்பது தெரியும்.தங்கம் தென்னரசு: நான்கு ஆண்டுகளாக, ஒப்பந்ததாரர் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
நிறைய ஒப்பந்ததாரரை அனுமதித்தால் தானே, போட்டி நிலவும். 'தி.மு.க., ஆட்சியில், நிலம் கையகப்படுத்தாமல், பாலம் கட்டும் பணிகளை துவக்கியதால், பல பணிகளை முடிக்க முடியவில்லை' என, முதல்வர் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியிலும், அதே நிலை தொடர்கிறது. ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம், 2018ல் துவக்கப்பட்டு, 30 சதவீதப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. தேவையான நிலம் கையகப்படுத்தப்படவில்லை. நில உரிமையாளர்களுக்கு, இழப்பீடு கூட நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது.
முதல்வர்: காலம் காலமாக, இப்பிரச்னை இருந்ததால், நிலத்தை கையகப்படுத்திய பின், பாலம் கட்டும் பணி துவக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், நுாறு சதவீதம் நிலம் கையகப்படுத்திய பின், பணி துவக்க காலதாமதம் ஏற்படுவதால், 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தியதும், பணிகள் துவக்கப்படுகின்றன.
தங்கம் தென்னரசு: திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகை நீர்தேக்கம் அமைக்கும் திட்டம், 2013ல் அறிவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தப் படாததால், இன்னும் பணி நிறைவடையவில்லை. இழப்பீடு உறுதி செய்யப்படவில்லை என, தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர்: சிலர் நீதிமன்றம் சென்றதால், தாமதம் ஏற்பட்டது; தற்போது, தீர்ப்பு வந்து விட்டது. மூன்று மாதங்களில், பணி நிறைவடையும்.தங்கம் தென்னரசு: குடிமராமத்து திட்டத்தில், இதுவரை எவ்வளவு பணிகள், எங்கெங்கு செய்யப்பட்டுள்ளன என்ற, பட்டியலை கேட்டோம்; இதுவரை வழங்கப்படவில்லை.
முதல்வர்: தொகுதி பக்கம் போயிருந்தால் தெரிந்திருக்கலாம். இது, மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. பொது மக்களிடம், விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நடப்பு, 2020 - 21ம் நிதியாண்டில், 1364 பணிகள், 499.75 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 14 ஆயிரம் ஏரிகளில், 4,865ல் துார் வாரப்பட்டுள்ளன. உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளையும், குடிமராமத்து திட்டத்தில், துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசு: தொகுதி பக்கம் செல்வதால் தான், நான்காவது முறை, எம்.எல்.ஏ.,வாகி உள்ளேன். அனைத்து உறுப்பினர்களும், அவரவர் தொகுதியில் நடக்கும் பணிகள் குறித்த பட்டியலை கேட்கின்றனர். முதல்வர்: உங்கள் தொகுதியில் நடந்த பணிகள் பற்றிய பட்டியலை தருகிறேன்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
19-மார்-202010:43:07 IST Report Abuse
நக்கீரன் ஆம் குடிமராமத்து திட்டம் நீங்கள் கொள்ளையடித்து சுருட்டும் வகையில் சிறப்பாக செயல்படுகிறது. ஆட்சியின் இறுதியில் முடிந்த வரையில் சுருட்டப்பார்க்கிறீர்கள். சுருட்டுங்கள். அடுத்த நேர்மையான ஆட்சி வந்தவுடன் அனைத்தும் பிடுங்கப்படும்.
Rate this:
sam - Trichy,இந்தியா
19-மார்-202013:21:03 IST Report Abuse
samஅடுத்து நேர்மையான ஆட்சியா. யாரை சொல்கிறீர்கள். திமுகாவையா. நாக்கு அழுகிட போகுது...
Rate this:
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
19-மார்-202008:55:26 IST Report Abuse
Sathiamoorthy.V கிழிந்தது. .
Rate this:
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
19-மார்-202008:50:15 IST Report Abuse
Sathiamoorthy.V கிழிந்தது.. குன்றத்தூர் அன்னை தெரசா நகர் முன்பு உள்ள அடையாற்றின் கரைக்கு கரையும் ஆறும் சந்திக்கும் இடத்தில சுவர் எழுப்பாமல் கரையின் அடுத்த பகுதியில் பிரமாண்டமாய் சுவர் எழுப்பி உள்ளார்கள் வாயில் கதவும் போட்டு உள்ளார்கள் மொத்தத்தில் வெள்ளம் வந்தால் அனைத்தும் காணாமல் போகும் ஏன் இந்த மக்கள் விரோத போக்கு என தெரியவில்லை பொதுப்பணித்துறையில் செய்த வேலையே திரும்ப செய்ய காசு பார்க்கும் வேலை மாதிரி தோன்றுகிறது சம்பந்தப்பட்டவர்கள் எங்கேயோ இருப்பார்கள் அந்நியன் சினிமா ரயில்வே கழிப்பறை காமெடி நினைவுக்கு வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X