சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

த.மா.கா., தலைவர் வாசன்: தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள், அரசு பணிகளில் சேர, முன்னுரிமை அளிக்கும் வகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மசோதா, தமிழ் வழி கல்வியை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சட்டத் திருத்தம், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் பற்றுள்ள மாணவர்களுக்கும், தமிழகத்திற்கும் பயன் தரும். 'டவுட்' தனபாலு: அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக ஆன பிறகு, அ.தி.மு.க., அரசுக்கு நன்றிக்கடன் தெரிவிக்க காத்திருந்தீர்கள். அதற்கான வாய்ப்பாக, இந்த மசோதாவுக்கு பாராட்டு தெரிவிக்கிறீர்களோ என்ற, 'டவுட்,' தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ஆங்கிலத்தில் படித்த இன்ஜினியர்கள், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை இல்லாத நிலையில், தமிழில் மட்டுமே படித்தால், நம் இளைஞர்கள் கதி என்னவாகுமோ என்ற, கூடுதல், 'டவுட்'டும் எழுகிறதே!



காங்., முன்னாள் தலைவர் ராகுல்: தமிழக, எம்.பி.,க்கள், தமிழ் மொழி பற்றி, ஒரு துணை கேள்வி கேட்க விரும்பினர். அது, தமிழக மக்களைப் பற்றியது; அவர்களின் மொழி பற்றியது. தங்கள் மொழியைப் பாதுகாக்கவும், அதை நம்பவும், பேசவும் அவர்களுக்கு உரிமை உண்டு. அதற்கு குரல் கொடுப்பதை, யார் தடுத்தாலும், ஏற்க முடியாது. தமிழ் மொழி தொடர்பான துணை கேள்வி கேட்க, ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் விரும்பிய நிலையில், லோக்சபா சபாநாயகர் அதை மறுத்து விட்டார்.

'டவுட்' தனபாலு: தமிழ் மற்றும் தமிழகம் மீது தான், உங்களுக்கு எவ்வளவு அக்கறை... பார்லிமென்டின் இரு சபைகளிலும், தமிழகத்தை சேர்ந்த, குறிப்பாக, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி, எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபடுவது, வாடிக்கையாக உள்ளது. தமிழக பிரச்னைகளை எழுப்பி, அவர்கள் ரகளையில் ஈடுபடும் போது, நீங்களும் அவர்களுடன் சேர்ந்து, கேள்வி கேட்க முனைந்தது, அமளியை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பே என்பது, 'டவுட்' இல்லாமல் புரிகிறதே!

தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில், காவல் துறை, விபத்து நடந்ததுக் எப்படி என, நடித்துக் காட்ட வற்புறுத்துவதாக, உயர்நீதிமன்றத்தில், கமல் முறையீடு செய்துள்ளார். நடிகருக்கு, நடித்து காட்டுவது துன்புறுத்தலா; ஒரு அரசியல் கட்சி தலைவர், மூன்று பேர், இறந்த வழக்கில், காவல் துறை விசாரணைக்கு, ஒத்துழைக்க தயங்குவது ஏன்? அச்சமா; அலட்சியமா?

'டவுட்' தனபாலு: தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனுபவிக்கும் சிறப்பு சலுகைகளைப் பார்த்து, அது போல தனக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான், நடிகர் கமலும், கட்சியை துவக்கியுள்ளார் என்பது, தமிழக மக்களின் பொதுவான கருத்து. விசாரணைங்கிறது, இப்படி தான் இருக்கும்ங்கிறது அவருக்குப் புரியலேன்னா, என்ன செய்யிறது... சினிமாவுல காட்டுறது வேற, நிஜம் வேறன்னு, அவருக்குப் புரியலியே... நிலைமை இவ்வாறு இருக்கையில், அவரிடம் நடித்துக் காண்பிக்க சொன்னால், கோபம் வராதா என்ன என்பதே என், 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
19-மார்-202013:29:36 IST Report Abuse
karutthu தமிழில் பீ ஈ டிப்ளமா படித்தவர்களுக்கு தமிழ் நாட்டிற்குள் வேலைகிடைத்தால் தான் அதுவும் ஓ சி பிரிவில் இருப்பவர்களுக்கு நிச்சயம் நன்மை பயக்காது .ஆங்கிலம் மற்றும் ஹிந்தி (பேச தெரிந்தால் கூட போதும் ) படித்தால் மும்பை டெல்லி போன்ற இடங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
19-மார்-202013:20:32 IST Report Abuse
karutthu கல்வி பயின்றவர்கள், அரசு பணிகளில் சேர, முன்னுரிமை அளிக்கும் வகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மசோதா, தமிழ் வழி கல்வியை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சட்டத் திருத்தம், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் பற்றுள்ள மாணவர்களுக்கும், தமிழகத்திற்கும் பயன் தரும். 'டவுட்' தனபாலு: அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக ஆன பிறகு, அ.தி.மு.க., அரசுக்கு நன்றிக்கடன் தெரிவிக்க காத்திருந்தீர்கள். அதற்கான வாய்ப்பாக, இந்த மசோதாவுக்கு பாராட்டு தெரிவிக்கிறீர்களோ என்ற, 'டவுட்,'@எனக்கும் அதுதான் டவுட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X