அதிக விலை கொடுக்கப் போகிறோம்: ராகுல் எச்சரிக்கை

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (182)
Share
Advertisement
coronavirus,Congress,Rahul,RahulGandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல்காந்தி

புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இந்தியா அதிக விலை கொடுக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 151ஆக அதிகரித்துள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்னும் வேகத்துடன் செயல்படவில்லை என காங்., எம்.பி., குற்றம் சாட்டி உள்ளார்.


latest tamil newsஇதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா வைரஸ் தாக்குதலை திறம்பட எதிர்கொள்ள, உடனடியான அதிரடி நடவடிக்கைகள் தேவை. இந்த விவகாரத்தில், தீர்க்கமாக செயல்பட, மத்திய அரசு தவறியதற்கு, நம் நாடு, மிக அதிக விலை கொடுக்கப் போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கொரோனா பிரச்னைக்கு இந்தியா சரியான நடவடிக்கையை எடுக்காவிட்டால் இந்தியப் பொருளாதாரம் அழிந்துவிடும் என ராகுல் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (182)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
25-மார்-202009:42:47 IST Report Abuse
Davamani Arumuga Gounder சமீபத்தில் தாய்லாந்து சென்று வந்த பப்பு வையும்... அவர் கலந்து கொண்ட விழாக்களில் கலந்து கொண்டவர்களையும், அவருடன் நெருக்கமாக இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார்களா? மதுரையில் மசூதி நிர்வாகி.. கொரோனாவுக்கு '' தமிழ்நாட்டில் முதல் பலி ''... பலியானவர் ஒரு கட்டட கான்டிராக்டர். அதே பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நிர்வாகியாக உள்ளார். அடிக்கடி மசூதிக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில், அவர் சந்தித்த நபர்கள், நெருங்கி பழகிய பக்கத்து வீட்டுக்காரர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். பக்கத்து வீட்டில் 60 பேர் பங்கேற்ற விழாவிற்கும் அவர் சென்றுள்ளார். அங்கு அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 30 வீடுகள் சுகாதாரத்துறை கண்காணிப்பில் வந்துள்ளது. அங்கு அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி, மகனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த, தொண்டைச்சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அவர்கள் வசிக்கும் தெருப்பகுதி, மசூதி, இதர பகுதிகளில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது..... சமீபத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த 8 பேர் மதுரையில் உள்ள பல்வேறு மசூதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பாதிக்கப்பட்டவர் வழக்கமாக செல்லும் பள்ளிவாசலுக்கும் சென்றனர். பாதிக்கப்பட்டவர் தான் அவர்களை கவனித்ததாக கூறப்படுகிறது. எனவே 8 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்றும், அவரிடம் இருந்தே பரவியிருக்கலாம் என்றும் சுகாதாதரத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் 8 பேரும் சென்ற விளாம்பட்டி, மீனாம்பாள்புரம், எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட மசூதிகளில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 8 பேரும் சந்தித்த மசூதி நிர்வாகிகள் விவரத்தை மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்தனர். அவர்களை வீட்டுத்தனிமையில் வைக்க ஏற்பாடு நடக்கிறது. இதற்கிடையே புறநகர் பகுதியில் தங்கி இருந்த தாய்லாந்து நாட்டினர் 8 பேரையும் சுகாதாரத்துறையினர் நேற்று தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு வேளை யாருக்காவது பாதிப்பு உறுதியானால் அவர்கள் சந்தித்த நபர்களையெல்லாம் தேட வேண்டிய நிலை வரும்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
24-மார்-202010:47:59 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இனியாவது திருந்த முயற்சி செய்
Rate this:
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
20-மார்-202014:57:56 IST Report Abuse
Unmai vilambi எதிர்க்கட்சி என்றால் ஆளும் கட்சியின் எல்லா முடிவுகளையும் எதிர்க்கவேண்டும் , இதுதான் சுடலை மற்றும் ராகுலின் நிலை . சூழ்நிலைக்கு ஏற்றவாறு அரசுக்கு ஒருபோதும் இவர்கள் ஆதரவு அளித்ததில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X