அங்கன்வாடி மையம் அருகே பள்ளத்தால் குழந்தைகள் அச்சம்

Added : மார் 19, 2020
Share
Advertisement

நல்லம்பள்ளி: பூவல்மடுவில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள, 10 அடி பள்ளத்தால், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த டொக்குபோதனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்டது பூவல்மடுவு. இப்பகுதியில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இங்கு, இப்பகுதியை சேர்ந்த, 15 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த அங்கன்வாடி மையம் அருகே, குப்பை கிடங்கு அமைக்க, 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பின், இதை யாரும் பயன்படுத்தாத நிலையில், இது தற்போது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாதாள பள்ளமாக உள்ளது. இதனால், இந்த அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள், வெளியே சென்று விளையாட முடியாத நிலையில் அச்சத்துடன் வருகின்றனர். பள்ளத்தின் அருகேயே தார்ச்சாலை உள்ளதால், குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே, குழந்தைகளின் நலன்கருதி, இங்குள்ள பள்ளத்தை மூட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையோரத்தில் இந்த அங்கன்வாடி மையம் உள்ளதால், இக்கட்டடத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X