ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை

Added : மார் 19, 2020
Share
Advertisement

அரூர்: சித்தேரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன. இவற்றில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பல கிராமங்களில் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையுள்ளது. மலை கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற, பல கி.மீ., தூரம் நடந்து சித்தேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர வேண்டும். இந்த சுகாதார நிலையத்தில், இரண்டு டாக்டர்கள் மற்றும், நான்கு செவிலியர்கள் பணிபுரிகின்றனர். கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் தினமும், சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு, பகலில் மட்டுமே டாக்டர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் டாக்டர்கள் யாரும் இருப்பதில்லை. இதனால், விஷக்கடி மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பணியில் உள்ள இரண்டு டாக்டர்களும் ஆண்கள் என்பதால், பெண்கள் தங்களது உடல் சம்பந்தமான பிரச்னைகளை கூற தயங்குகின்றனர். ஏற்கனவே, இம்மலை கிராமங்களில் உள்ள மக்கள் நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதால், குழந்தைகள், 'தலசீமியா' நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சித்தேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் டாக்டர்களை நியமனம் செய்வதோடு, இரவில் டாக்டர்கள் தங்கி பணிபுரியும் வகையில், தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X