தனிமை மையத்தில் நடப்பது என்ன? ஈரானில் இருந்து வந்தவர்கள் வாக்குமூலம்

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (30) | |
Advertisement
மேற்காசிய நாடான ஈரானில் தவித்த, 195 இந்தியர்கள், நேற்று(மார்ச் 19), அழைத்து வரப்பட்டனர். ஈரானின் மகான் விமானத்தின், இரண்டு விமானம் மூலம் அவர்கள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள, ராணுவத்தின் சிறப்பு மருத்துவ மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர், நமது நாளிதழ்க்கு, தொலைபேசியில் கூறிய தகவல்கள்:
COVID2019india, CoronavirusOutbreak, iran, india, rajasthan, கொரோனா, ஈரான், இந்தியா, ராஜஸ்தான், வைரஸ்,

மேற்காசிய நாடான ஈரானில் தவித்த, 195 இந்தியர்கள், நேற்று(மார்ச் 19), அழைத்து வரப்பட்டனர். ஈரானின் மகான் விமானத்தின், இரண்டு விமானம் மூலம் அவர்கள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள, ராணுவத்தின் சிறப்பு மருத்துவ மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர், நமது நாளிதழ்க்கு, தொலைபேசியில் கூறிய தகவல்கள்: பல்வேறு காரணங்களுக்காக ஈரானுக்குச் சென்றிருந்தோம். 'கொரோனா' வைரஸ் பாதிப்பால், தலைநகர் டெஹ்ரான் உட்பட நாடு முழுவதும் அல்லோலகலப்பட்டுள்ளது. அங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதும், நாடு திரும்புவதற்கு, அங்குள்ள இந்தியத் தூதரகம் மூலம் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம். கடும் போராட்டத்திற்குப் பிறகே, சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளோம். எங்களுக்கு அங்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானதால், அழைத்து வந்தனர். இங்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள, ராணுவத்தின் சிறப்பு மருத்துவ நல மையத்தில் தங்க வைக்கப்பட்டோம். இந்த மையம், தற்போது, கொரோனாவுக்கான தனிமை மையமாக உள்ளது. அடுத்த, 14 நாட்களுக்கு, இங்கு தங்கியிருக்க வேண்டும்.


latest tamil newsராணுவ மையத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு, மொத்தம், 350 பேர் தங்கியுள்ளனர். மொத்தம், 15, 'பராக்' எனப்படும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பராக்கிலும், 18 பேர் உள்ளோம். ஒரு பராக்கில் உள்ளவர்கள், மற்ற பாரக்கில் உள்ளவர்களுடன் பேசவோ, பழகவோ முடியாது. முற்றிலும், குளிரூட்டப்பட்ட பராக்கில், ஒவ்வொருக்கும், தனி படுக்கை, போர்வை, பொருட்கள் வைக்க அலமாரி வழங்கப்பட்டுள்ளது. செல்போனில் பேசிக் கொள்ள அனுமதிக்கின்றனர். உடல் நல பாதிப்பு இருந்தால், கவனிப்பதற்கென, தனி மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இங்கு தங்குவோருக்கு, சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும், தனி தனி நேரத்தில் உணவுகள் பரிமாறப்படுகிறது. ஒரு பிரிவில் உள்ளவர்கள், உணவு அளிக்கப்படும் இடத்துக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.


latest tamil newsஒவ்வொரு நாளும் காலை, 6:30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலை, 7:00, பகல், 11:00 மற்றும் மாலை, 5:00 மணிக்கு தேநீர் வழங்கப்படுகிறது. காலை, 8:00 மணி முதல், 9:00 மணி வரை, காலை உணவு வழங்கப்படுகிறது. மதியம், 1:00 முதல், 2:00 மணி வரை மதிய உணவும், இரவு, 7:30 முதல், 8:30 மணி வரை இரவு உணவும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பராக்குக்கும், தனி தனி நேரத்தில், உணவு பரிமாறப்படுகிறது.கடும் முயற்சிக்களுக்குப் பிறகே, எங்களை மத்திய அரசு மீட்டு வந்துள்ளது. இங்குள்ள வசதிகள் பாராட்டக் கூடியதாக உள்ளது. ஆனால், தனித் தனி அறைகளில் தங்க வைக்காமல், ஒரு குழுவாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிலருக்கு பாதிப்பு இருந்தாலும், மற்றவர்களுக்கும் வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் உள்ளோம். ஏற்கனவே டெஹ்ரானில் பரிசோதனைகள் செய்தனர். தற்போதும், மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வருவதற்காக காத்திருக்கோம். அதுவரை, அச்சத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan G - Chennai,இந்தியா
21-மார்-202011:54:45 IST Report Abuse
Krishnan G சுடாலின், குருமா, டேனியல், சைமன், சில இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் மற்றும் அணைத்து திருட்டு திராவிட, மோடி ஜி எதிர்ப்பாளர்களும், இரானில் இருந்து நாடு திரும்பிய இஸ்லாமிய மக்களுக்கு தனி அறை வசதி செய்து கொடுக்காத, அசைவ (மாட்டு கறி) உணவு உன்ன அளிக்காத இந்த ஆட்சி ஒழிக மோடி ஜி ஒழிக என்று கோஷமிட தயாராகிவிட்டார்கள். அனைவருக்கும் பிரியாணி மற்றும் குவார்ட்டர் இலவசம். மக்களே விரைந்து செல்வீர். இலவசம் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. வாழ்க பாரதம் வளர்க தமிழகம்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-மார்-202012:39:24 IST Report Abuse
Cheran Perumal அழைத்து வந்ததே பெரிய விஷயம். அதிலும் குறையா?இவர்கள் சொர்க்கமாக மதிக்கும் பாகிஸ்தான் யாரையும் அழைத்து வரமுடியாது என்று சொல்லிவிட்டது.குவைத்திலிருந்து வந்த குரூப்பு எங்களை தனிமை படுத்தக்கூடாது என்று போராட்டம் நடத்தியிருக்கிறது. இவர்களையெல்லாம் அழைத்து வந்ததே பெரிய தப்பு என்று உணர்த்தியிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
20-மார்-202004:38:28 IST Report Abuse
Siva Kumar இரானிலிருந்து திரும்பி அழித்து வரப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் மட்டுமே. அந்த கூட்டத்தில் வேறொரு மதத்தை சேர்ந்த ஒருவர் கூட கிடையாது. இதனை புரிந்து கொண்டாவது CAA மற்றும் NPR போன்ற இந்திய மக்களுக்கு ஆதரவான சட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடாது.
Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
21-மார்-202015:58:57 IST Report Abuse
Jaya Ramஅய்யா அவர்கள் எதிர்ப்பதே நீங்கள் நினைப்பது போல CAA, NPR, என்ற சட்டங்களை அல்ல உள்நாட்டில் நிறையபேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளனர் அவர்களை வெளியேற்றினால் நாளை நமக்கு என்று போராட ,தீவிரவாதத்திற்கு , ஆட்கள் தேவைப்படுவர் எனவே அவர்களை மறைக்கவே இந்த ஏற்பாடு வேறொன்றும் வேண்டாம் தொழில் நகரங்களாக இருக்கும் இந்திய பெருநகரங்களை மட்டும் கணக்கிடுங்கள் அம்மாநிலத்தினை வேறு மாநிலத்தினை சார்ந்தவர் என்று பின்னர் வேறுமாநிலத்தினை சர்ர்ந்தவரின் பூர்விகம் பற்றி விசாரித்தால் போதும் இவர்களின் கூட்டு வெளிப்படும் அதற்க்கு முதலில் அந்தந்த மாநிலங்களில் வேலைக்கு அமர்த்தியுள்ள தனியார் முதலாளிகளை உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் என்னுடைய நிறுவனத்தில் வேலைபார்ப்பவர்களின் வெளிமாநிலத்தவர் பட்டியல் அவர் எந்த மாநிலத்தினை சார்ந்தவர் என்றவிபரங்களை தரச்சொல்லுங்கள் அப்படி தரவில்லையென்றால் அவருக்கு 2 வருட சிறை என்று அறிவியுங்கள் அதைப்போலவே அவர்களுக்கு வீடு கொடுத்துள்ள வீட்டின் உரிமையாளர்கள் , லாட்ஜ் உரிமையாளர்கள் அனைவருக்கும் இதையே அறிவியுங்கள் விபரங்கள் தானே வந்துவிடும். இஸ்லாமியர் அனைவரும் இச்சட்டத்தினை எதிர்க்கவில்லை அன்னியநாட்டிடம் பணம் பெற்று இங்கு சில தீய செயல்களை செய்யும் நல்லவர்கள் என்ற முகமூடி அணிந்தவர்கள் , மதத்தீவிரவாதிகள், மேலும் உலகில் எந்த நாட்டிலும் ( இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய) இந்த இஸ்லாமியர்களுக்கு , அதுவும் ஒரு பெரும்பாண்மை சமூகத்தினை எதிர்க்கக்கூடிய அளவிற்கு இவ்வளவு சுதந்திரம் உரிமைகள் கொடுக்கப்படவில்லை அதை இழக்க கூடிய நிலைக்கு செல்லவிரும்பவில்லை எனவே இச்சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் இதன் தொடர்ச்சியாக பலவிதமான கட்டுப்பாடுகள் வரும் என்று கருதியே இப்போராட்டங்கள் இதில் ஆளுங்கட்சி உட்பட சில அரசியல்கட்சிகளின் சித்து விளையாட்டுக்கள் எனவே அவர்களிடம் இருந்து படத்தினை எதிர்பார்க்க முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X