பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உத்தரவை மீறி பள்ளி நடத்துவோர் மீது நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை

Added : மார் 19, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: அரசின் உத்தரவை மீறி, பள்ளிகள் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'கொரோனா வைரஸ்' பரவாமல் தடுக்க, தமிழக அரசு ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், பலர் கூட்டமாக சேரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் அதிகம் வந்து செல்லும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா ஆகியவை நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டன. இதனால் அணைப்பூங்கா வெறிச்சோடியது. மீன்களை பிடிக்கவும் யாரையும் அனுமதிக்கவில்லை. மேலும் அணையின் மேல் பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட மீன் வறுவல் கடைகளிலும், கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று முதல், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகனங்களுக்கு லைசென்ஸ் மற்றும் எல்.எல்.ஆர்., ஆகியவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி, பள்ளிகள் நடத்தினால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தாலும், கிருஷ்ணகிரியில் உள்ள, மூன்று தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, 'கொரோனா வைரஸ்' பாதிப்பு புரியாமல், பள்ளிகள் நடத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X