பொது செய்தி

தமிழ்நாடு

கருணை அடிப்படையில் 3 பேருக்கு பணி நியமன ஆணை

Added : மார் 19, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கருணை அடிப்படையில், மூன்று பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில், மூன்று நபர்களுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரபாகர், பணி நியமன ஆணையை வழங்கினார். மாவட்ட எஸ்.பி., பண்டி கங்காதர் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி தாலுகா ஆவல்நத்தம் கூட்ரோடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த ராஜா என்பவர் கடந்த ஆண்டு ஆக., 14ல் கொலை செய்யப்பட்டார். அவரது மகன் பார்த்தசாரதி கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டார். இதே போல, சூளகிரி ஒன்றியம் உத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு மைய சமையலராக பணிபுரிந்து, பணி காலத்தில் இறந்த, சிக்கம்மாவின் வாரிசான அவரது மகள் மாலா என்பவர், அளேசீபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். ஓசூர் ஒன்றியம் முகளுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து, பணிக்காலத்தில் மரணமடைந்த, புட்டம்மாவின் வாரிசு ரத்தினம்மாள் என்பவர், முகளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்டார். இவர்கள் மூன்று பேருக்கும், பணி நியமன ஆணைகளை, கலெக்டர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X