பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பாதிப்பு எதிரொலி: 'வாட்ஸ் ஆப்'ல் புகாரளிக்க மின்வாரியம் அறிவுறுத்தல்

Added : மார் 19, 2020
Share
Advertisement

ஓசூர்: 'கொரோனா வைரஸ்' பரவுவதை தடுக்கும் பொருட்டு, மின் நுகர்வோர் வரும், 31 வரை நேரில் குறைகளை தெரிவிக்க வருவதை தவிர்த்து, கடிதம், மொபைல்போன் மற்றும் 'வாட்ஸ் ஆப்' மூலம் புகார் தெரிவிக்கலாம் என, ஓசூர் செயற்பொறியாளர் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றின் ஆணையின் படி, 'கொரோனா வைரஸ்' தொற்று பரவாமல் தடுக்க, ஓசூர் கோட்ட மின் நுகர்வோர்கள் வரும், 31 வரை, தங்களது குறைகளை நேரில் வந்து தெரிவிப்பதை தவிர்த்து, கடிதம், மொபைல்போன் அல்லது 'வாட்ஸ் ஆப்' மூலமாக தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே, ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளரை, 94458 55458 என்ற எண்ணிலும், ஓசூர் நகர இயக்கம் மற்றும் பராமரிப்பு உதவி செயற்பொறியாளரை, 94458 55459, பாகலூர் உதவி செயற்பொறியாளரை, 94458 55468, சிப்காட் உதவி செயற்பெறியாளரை, 94458 55473, தேன்கனிக்கோட்டை உதவி செயற்பொறியாளரை, 94458 55479, ஓசூர் உதவி செயற்பொறியாளரை, 94458 55485 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X