பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி அரசு அங்காடியில் ரூ.1.11 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்

Added : மார் 19, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில், கடந்த, 15 நாட்களில், ஒரு கோடியே, 11 லட்சம் ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் ஏலம் போயின. தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், நாள்தோறும் நடக்கும் ஏலத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து, ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில், இம்மாதத்தின், கடந்த, 15 நாட்களில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடு ஏலம் நடக்கவில்லை. மேலும், 272 விவசாயிகள், 584 குவியல்களாக, 23 ஆயிரத்து, 37 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 280 முதல், 575 ரூபாய் வரை சராசரியாக, 483 ரூபாய்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, ஒரு கோடியே, 11 லட்சத்து, 37 ஆயிரத்து, 433 ரூபாயாகும். இம்மாதத்தின், 15 நாட்களில் நடந்த இந்த வெண்பட்டுக்கூடுகள் ஏலத்தால், அரசுக்கு, ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 60 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X