பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சள் ஏல விடுமுறை தேதிகள் மாற்றம்

Added : மார் 19, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என நான்கு இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, தெலுங்கு வருட பிறப்பு போன்ற காரணத்தால், 23 முதல் ஏப்., 6 வரை விடுமுறை என அறிவித்திருந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், விடுமுறை அறிவிப்பு மாற்றப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க வரும், 23 முதல், 31 வரை மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை விடுக்கப்படுகிறது. ஏப்., 1 முதல் வழக்கம்போல, மஞ்சள் ஏலம் நடக்கும். ஏப்., 6ல் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் ஏலத்துக்கு விடுமுறை விடுக்கப்படும். இத்தகவலை, ஈரோடு மஞ்சள் வணிகர்கள், கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X