தமிழ்நாடு

ஈரோட்டில் ஜவுளி, நகைக்கடைகள் மார்ச் 31 வரை மூட ஆர்.டி.ஓ., உத்தரவு

Added : மார் 19, 2020
Share
Advertisement

ஈரோடு: 'கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து ஜவுளி கடைகள், நகைக்கடைகள் வரும், 31 வரை, மூட வேண்டும்' என, ஈரோடு ஆர்.டி.ஓ., முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பள்ளி, கல்லூரி, சினிமா தியேட்டர், நீச்சல் குளம், கால்நடை சந்தை, டாஸ்மாக் பார், ஜவுளிச்சந்தை, வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று ஜவுளிக்கடை, நகைக்கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

இதில், ஆர்.டி.ஓ., முருகேசன் பேசியதாவது: தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம், பெரும் ஆபத்தாக உள்ளது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நோயின் தன்மை தீவிரமாக இருப்பதால், ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டால், 100 பேருக்கு மேல் பரவும். உயிர் இழப்பு ஏற்படும். எனவே, நோய் பரவுவதை கட்டுப்படுத்த, கடைகளை பத்து நாட்களுக்கு மூடினால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை உணர்கிறோம். பொருளாதாரம் பாதிக்கும். எனினும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடையில்லை. நோயின் தாக்கம் இருப்பது தெரியவந்தால், 144 தடை உத்தரவு பிறப்பிக்க கூட, கலெக்டருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நீண்ட நேரம் காத்திருந்து பொருட்கள் வாங்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஜவுளிக்கடை, நகைக்கடைகளை மூட வேண்டும். தற்காலிகமாக வரும், 31 வரை கடைகளை மூடுங்கள். அவ்வாறு மூடப்படாத கடைகளுக்கு, சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கோவில்களுக்கு செல்வது, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு செல்வதை கூட தவிர்க்கலாம். வெளிநாட்டில் இருந்து யாராவது வந்தால் தகவல் தெரிவியுங்கள். சிறப்பு கவனம் செலுத்தி, அவரால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

ஒரே நாளில் 1 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு: ஈரோடு மாவட்டத்தில், நகைக்கடைகள் மூடப்பட்டதால், நேற்று ஒரே நாளில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட உள்ளூர் நகை வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் உள்ளனர். 50க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நகைக்கடைகள் உள்ளன. ஈரோட்டில் சீசன் சமயத்தில் மொத்தமாக, ஒரு கோடி ரூபாய்க்கு தங்க நகை வர்த்தகம் நடக்கும். நேற்று காலை கடைகளை அடைக்க சொல்லி, திடீரென உத்தரவு வந்ததால், தங்க வர்த்தகம் முற்றிலும் பாதித்தது. இது குறித்து, ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் தர்மராஜன் கூறியதாவது: ஈரோடு டவுன் போலீசார் நேற்று காலை, 11:00 மணிக்கு வந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி, நகை கடைகளை மூட வேண்டும் என, எச்சரித்தனர். இதனால், கடைக்கு வந்த ஓரிருவரும் திரும்பி சென்றனர். இதே போல், மாவட்டம் முழுவதும் நகைக் கடைகள் மூடப்பட்டன. நேற்று ஒரே நாளில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு தங்க நகை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X