பொது செய்தி

தமிழ்நாடு

ஜம்பூத்துமலையில் கண்டறிந்த அரிய வகை வலசைப்பறவை

Added : மார் 19, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஜம்பூத்துமலை கிராமத்தில், அரிய வகை, 'டிக்கெல் பூங்குருவி' வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பறவைகள், தங்கள் பகுதியில் கடும் குளிர் நிலவக்கூடிய காலங்களில், உணவுக்கு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நீண்ட தூர பயணம் மேற்கொள்ளுதலை, வலசைப்போதல் என்பர். அதன்படி, இமயமலையிலிருந்து வலசை வந்த பறவையொன்று, சேலம் மாவட்டம், வாழப்பாடி, ஜம்பூத்துமலை கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. பறவைகள் ஆய்வாளர், அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வன், பறவைகளைப் கண்டறிந்து, 'இபேடு' இணையதளத்தில் பதிவு செய்து, மாணவ, மாணவியருக்கு, பறவைகள் குறித்து விளக்கமளிக்கிறார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: ஜம்பூத்துமலை நீரோடை அருகே, இதுவரை நான் பார்த்திராத பறவை ஒன்றை கண்டேன். பின், புகைப்படம் எடுத்து, ஆய்வு செய்தபோது, இமயமலையிலிருந்து தென்மாநிலங்களுக்கு வரும், 'டிக்கெல் பூங்குருவி' என தெரிந்தது. இமயமலையை வாழிடமாகக்கொண்ட இப்பறவை, அங்கு கடுங்குளிர் நிலவுவதால், உணவு தேடி இந்தியாவின் தென்பகுதிக்கு வந்தது. சிட்டுக்குருவி அளவுடைய, பழுப்பு நிற அலகு, வெளிறிய மஞ்சள் நிற கால்களுடன் உள்ளது. ஆண் பறவை வெளிர் சாம்பல் நிறம், பெண்பறவை வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். பெண் பறவை மார்பு பகுதியில் அடர் பழுப்பு நிறம், வரிகளை காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த, பறவை ஆய்வாளர் கணேஷ்வர் கூறியதாவது: மறைந்த, பிரிட்டிஷ் பறவையியலாளர் சாமுவேல் ரிச்சர்ட் டிக்கெலின் நினைவாக, இப்பறவைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. டிக்கெல் மலர் கொத்தி, டிக்கெல் நீல ஈப்பிடிப்பான், டிக்கெல் பழுப்பு இருவாச்சி என்பன, அவர் பெயரிலுள்ள சில பறவைகள். தற்போது கண்டறிந்துள்ள டிக்கெல் பூங்குருவி, தமிழகத்தில், 11ம் முறையாகவும், சேலம் மற்றும் ஒட்டுமொத்த கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இரண்டாவது முறையாகவும் பார்த்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த ஏப்ரலில், ஏற்காடு மலையில் முதல்முறையாக கண்டறியப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X