சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டுமனை அப்ரூவலுக்கு லஞ்சம்: பெண் பி.டி.ஓ., அதிரடி கைது

Added : மார் 19, 2020
Share
Advertisement

கரூர்: திருப்பூர் மாவட்டம், கன்னிவாடியை சேர்ந்தவர் ரமேஷ், 37. இவர், கரூர் மாவட்டம், பவுத்திரம் அருகே, நான்கு ஏக்கர் நிலத்தை, வீட்டுமனைகளாக விற்பனை செய்ய திட்டமிட்டார். அதற்காக, வீட்டுமனை அப்ரூவல் வாங்க, க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் எனப்படும் பி.டி.ஓ., ஜெயந்திராணி, 48, என்பவர், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த ரமேஷ், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை, நேற்று மதியம் ஜெயந்திராணியிடம், ரமேஷ் கொடுத்தார். மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X