வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: "கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தனி வார்டுகள் அமைப்பதற்கு, தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

அங்கு, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் தரமான பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கு முன்வந்தால் அரசு அதற்கான அனுமதி வழங்கும். அரசு மருத்துவமனையில் தனி வார்டுகளில் கொரோனா அறிகுறியுள்ள 32பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.