தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டு: அரசு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டு: அரசு அறிவுரை

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (11)
Share
கொரோனா, தனியார்மருத்துவமனை, சுகாதாரஅமைச்சர், விஜயபாஸ்கர், coronovirus, privatehospitals, Vijayabaskhar,

இந்த செய்தியை கேட்க

சென்னை: கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: "கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தனி வார்டுகள் அமைப்பதற்கு, தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.


latest tamil news



அங்கு, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் தரமான பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கு முன்வந்தால் அரசு அதற்கான அனுமதி வழங்கும். அரசு மருத்துவமனையில் தனி வார்டுகளில் கொரோனா அறிகுறியுள்ள 32பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X