பொது செய்தி

தமிழ்நாடு

கோவை கோர்ட்டில் ஊழியர்களுக்கு பரிசோதனை

Added : மார் 19, 2020
Share
Advertisement

கோவை: கொரோனா வைரஸ் தொற்று, நாடு முழுவதும் வேகமாக பரவுவதால், கோவை ஒருங்கிணைந்த கோர்ட் நுழைவாயிலில், சுகாதாரத் துறை அலுவலர்கள் தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனைக்கு பிறகே கோர்ட் அலுவலர்களை அனுமதிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களை கண்டறியவும், பரவாமல் தடுப்பதற்கும் கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கோர்ட்டில் உள்ள 6 நுழைவாயில்களில் 4 நுழைவாயில்கள் மூடப்பட்டன. இரண்டு நுழைவாயில்கள் மட்டுமே திறந்துள்ளன. இந்த நுழைவாயின் முன்பாக சுகாரத்துறை ஊழியர்கள் 10க்கு மேற்பட்டோர், இன்று காலை முதல் தீவிரமான தெர்மல் பரிசோதனைக்கு பிறகே ஊழியர்களை உள்ளே அனுமதிக்கிறனர். கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்குகின்றனர்.

நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட் அலுவலர்கள், வழக்கு தொடர்புடையவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. வழக்கு தொடர்பற்ற யாருக்கும் அனுமதி இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X