பொது செய்தி

இந்தியா

உலக சுகாதார அமைப்பின் அறிவுரைப்படி வாழும் கேரள 'குடி'மகன்கள்: வைரலாகும் படங்கள்

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: கேரளாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 24 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4,180 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 270 பேர் மருத்துவமனைகளிலும், 3,910 வீடுகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


latest tamil news
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் சிலர், நோய் தொற்றுடன், 'சேர் ஆட்டோ, பஸ், ரயில்' உள்ளிட்டவற்றில் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், கேரள மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். வெளியில் சென்றால், முகக் கவசம் அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


latest tamil news
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மக்கள் அதிகமாகக் கூடும், சாப்பிங் மால், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளுக்குக் கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஆனால், கேரள மதுபான விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை.Responsible drinking has a new meaning. Malayalis queuing up to buy alcohol. #COVID2019india #Kerala pic.twitter.com/UuBwvyipuH

— varghese k george (@vargheseKgeorge) March 19, 2020
15 கி.மீ.,க்கு ஒரே ஒரு 'கடை'கேரளாவில், 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, ஒரே ஒரு மதுபானக் கடையை மட்டுமே அரசு வைத்திருப்பதால், எப்போதும் அந்தக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். அனைவரும் வரிசையில் பல மணி நேரம் நின்று, மதுபானங்களை வாங்கிச் செல்வர். தற்போது கேரளாவில் நிலவிவரும் கொரோனா பீதியால், அனைத்து இடங்களும் வெறிச்சோடியுள்ளன. ஆனால், மதுபானக் கடைகள் மட்டும் எப்போதும் இயங்குகின்றன. ஆனால், குடிமகன்கள் அனைவரும், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.latest tamil news
'கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும். தொட்டுப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்' என, உலகச் சுகாதார அமைப்பின் அறிவுரைப்படி, மதுப்பிரியர்கள் இடைவெளி விட்டு நிற்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதற்கு பலரும், 'கேரள மக்களின் பொறுப்பான குடிப்பழக்கம் ஒரு புதிய அர்த்தத்தைக் கொண்டுள்ளது' என, கருத்து தெரிவித்து வருகின்றனர்.


வலுக்கும் போராட்டம்கொரோனா பீதியால், மக்கள் கூடும் இடங்களை அடைத்த கேரள அரசு, மதுபான விற்பனையகங்களை மட்டும் அடைக்காமல் இருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மதுக்கடைகளை அடைக்கக் கோரி, மதுக்கடைப் பணியாளர்கள் சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
19-மார்-202019:16:32 IST Report Abuse
chander வாழ்க பெரும் குடிமக்கள்
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மார்-202017:37:19 IST Report Abuse
J.V. Iyer பொறுப்பான 'குடி'மகன்கள்.
Rate this:
Share this comment
Cancel
19-மார்-202017:07:49 IST Report Abuse
ஆப்பு போற உசிரு போதையிலே போகட்டும்.
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
19-மார்-202019:07:56 IST Report Abuse
VELAN Sஏங்க , உங்களுக்கு ஒன்னு தெரியாதா , சாராயம் நீங்க நிறைய உஊத்திக்கிட்டேங்கன்னா , உங்களுக்கு கரோனா வராது , அதுதான் கிருமி நாசினியாச்சே ,, அதுக்குதான் குடிமகன்கள் இப்ப குடிக்க போறதா சொல்றாங்க , " இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க " ஆனால் நீங்க சொல்ற மாதிரி , கரோனா வராது , நிறைய குடிக்கும்போது உயிர் போயிடும் , அதை பற்றி யார் கவலைப்பட போறாங்க , நமக்கு கரோனா வரக்கூடாது அதுதான் முக்கியம் , நான் சொன்னது சிந்திக்க இல்லிங்கோ , சிரிக்கிறதுக்காக சொன்னது , தப்பா புரிஞ்சிகிட்டேங்களா . ஹூம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X