சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி வந்த விமான பயணிகள் 28 பேர் கண்காணிப்பு

Added : மார் 19, 2020
Share
Advertisement

திருச்சி: துபாய், சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து வந்த பயணிகளில், 28 பேர் கள்ளிக்குடி மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர், துபாய் மற்றும் சார்ஜா போன்ற நாடுகளிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் உட்பட 3 விமானங்கள், நேற்று இரவு திருச்சிக்கு வந்தன. அதில் வந்த 367 பயணிகளை 2 சுகாதார ஆய்வாளர் தலைமையிலான 6 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினர், டிஜிட்டல் தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் பரிசோதனை செய்தனர். அதில், 27 பேர் உடல் நலக் குறைவுடன் இருப்பது கண்டறியப்பட்டதால், அவர்கள் கள்ளிக்குடி மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ கண்காணிப்பு மையத்துக்கு நேற்று இரவே அனுப்பி வைக்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, அங்கு ஜெர்மனை சேர்ந்த ஒருவர் தங்கியுள்ள நிலையில், மருத்துவ கண்காணிப்பு மையத்தில் 28 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் குழு, இன்று கண்காணிப்பு மையத்துக்கு சென்று, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சோதனை செய்ய உள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி, சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.
விமானங்களில் வரும் பயணிகளில் உடல் நலக் குறைவுடன் வருபவர்கள் மட்டும், 14 நாட்கள் இந்த மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர், என்று பொது சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X