தமிழ்நாடு

'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்டத்தில் 8 இடங்களில் 'செக்போஸ்ட்'

Added : மார் 19, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. எட்டு இடங்களில், 'செக்போஸ்ட்' அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது' என, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தெரிவித்தார்.
சீனாவில், 2019, டிச., மாதம், 'கொரோனா' வைரஸ் பரவத்துவங்கியதை அடுத்து, நாடு முழுவதும், உஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், தடுப்பு நடவடிக்கையை, அரசு முடுக்கி விட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகள், கால்நடை சந்தைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில்களின் நடையும் சாத்தப்பட்டுள்ளது. மேலும், கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, புளியஞ்சோலை சுற்றுலா தலம், ப.வேலூர் அடுத்த ஜேடர்பாளையம் அணைக்கட்டு, பூங்கா மற்றும் மாவட்டத்தில் உள்ள பூங்காக்களுக்கு, மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து அரசு அலுவலகங்களிலும், கைகளை கழுவுவதற்கு சோப் மற்றும் கிருமி நாசினி திரவங்களை வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் வகையில், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் ஆகிய இடங்களில், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதுகுறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறியதாவது: கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில், முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாலுகா அளவில், துணை கலெக்டர் நிலையில், ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து வந்த, 72 பேர் காண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், எட்டு இடங்களில், செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில், வருவாய் துறை மற்றும் மருத்துவர் குழுவினர் அடங்கிய, 'மாவட்ட அவசர கால தொடர்பு மையம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையத்தை, '1077' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தைப் பொறுத்தவரை, இதுவரை யாரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. கொல்லிமலையை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு மட்டுமே வைரஸ் தொற்று குறித்த சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், எவ்வித பாதிப்பும் இல்லை. இருந்தாலும், அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X