பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை

Added : மார் 19, 2020
Share
Advertisement

நாமக்கல்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது சம்பந்தமாக, அமைதி பேச்சு வார்த்தை நடந்தது.
மோகனூர் அடுத்த நன்செய் இடையாறில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, வரும், 22ல், துவங்கி, நான்கு நாட்கள் நடத்துவதற்கு, விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பொதுக்கூட்டம், திருவிழாக்கள், சினிமா தியேட்டர் உள்ளிட்டவற்றை வரும், 31 வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு குறித்து, அமைதி பேச்சு, நாமக்கல் ஆர்.டி.ஓ., கோட்டை குமார் முன்னிலையில் நடந்தது. இதில், முடிவு செய்யப்பட்ட விபரம் பின்வருமாறு: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். தற்போது, கொரோனா வைரஸ் பரவி வருவதால், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், கொரோனா வைரஸ் தொற்றுவதை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கோவில் நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கோவில் திருவிழாவை தள்ளி வைப்பதை ஏற்று, பிறிதொரு நாளில், மறு உத்தரவு கிடைத்தபின் திருவிழா நடத்தலாம் என வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். திருவிழாவுக்கு, வெளியூர் பக்தர்கள் வருதையும், வாகனங்கள் பக்தர்களை ஏற்றிக் கொண்டு வருவதும் தடை செய்யப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் திருவிழாவை நிறுத்துவது தொடர்பாக ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் எனக்கூறி, கோவில் அறங்காவலர் குழுவினர், கையெழுத்திடாமல் கலைந்து சென்றனர். இக்கூட்டத்தில், கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செந்தில்குமார், சண்முகம், கனகராஜ், குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X