பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ்: விழிப்புணர்வு கூட்டம்

Added : மார் 19, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும், பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலை வகித்தார். கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்து பேசியதாவது: கொரோனா வைரஸ் எளிதில் தொற்றக்கூடிய வைரஸ் கிருமியாகும். தொடுதல் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவுகின்றது. இந்நோய் தொற்று ஏற்பட்ட நபர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லாமல், மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அவர்கள், குணமானது உறுதி செய்யப்பட்ட பின்னரே, பொது இடங்களுக்கு வரவேண்டும். அதுவரை பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை, தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தவரை முகத்தினை கைகளால் தேவையில்லாமல் தொடக்கூடாது. அடிக்கடி பயன்படுத்தும் மொபைல்போன், தொலைக்காட்சி, ரிமோட், சுவிட்சுகள், சமையல் லைட்டர் ஆகியவற்றை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சளி, இருமல் இருந்தால், கைக்குட்டை வைத்து முகத்தை மறைத்து பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவசியமில்லாமல், பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற வளாகத்திற்கு வரும் வக்கீல்கள், வழக்காடிகள், பொதுமக்கள் வந்தவுடன், கைகழுவுவதற்கு ஏற்ப, கைகழுவும் அமைப்பை அமைத்துக் கொடுக்க வேண்டும். நீதிமன்ற வளாக கட்டங்களின் தரைப்பகுதி, கைப்பிடி பகுதி, படுக்கைகள் மற்றும் அனைத்து பயன்பாடு உள்ள பகுதிகளிலும், கிருமி நாசினி திரவம் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மருத்துப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
தடுப்பு நடவடிக்கை; கலெக்டர் ஆய்வு: ப.வேலூர் தாலுகாவில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். பரமத்தி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் நோயாளிகளின் வருகைப்பதிவேடு மற்றும் நோய்களின் தன்மை குறித்து உரிய சிகிச்சையளிக்கப்படுகிறதா எனவும், சுகாதாரமான முறையில் மருத்துவமனை பராமரிக்கப்படுகிறதா எனவும், கலெக்டர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து, ஜேடர்பாளையம் படுகையணை மற்றும் அண்ணா பூங்காவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாததையடுத்து, பூங்காவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X