பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் சாயமிடுவது குறித்த தொழிநுட்ப கருத்தரங்கம்

Added : மார் 19, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் சாயமிடுவது குறித்த, தொழிநுட்ப அறிமுக விழா, குமாரபாளையத்தில் நடந்தது. குமாரபாளையம் கிரீன் காவேரி டையிங் கிளஸ்டர், பள்ளிபாளையம் டையிங் சங்கம், ஈரோடு டெக்ஸ்டைல் சங்கம் சார்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சாயமிடும் புதிய தொழிநுட்ப அறிமுக விழா நடந்தது. தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஏ.ஐ.சி., 'நிப்ட் டீ' நிறுவன திருப்பூர் கிளை மேலாளர் பெரியசாமி குத்துவிளக்கு ஏற்றினார். பிரபாகரன் கூறியதாவது: சாயப்பட்டறை யில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், காவிரி நீர் மாசுபடாமல் இருக்க முயற்சித்து, அதன் பலனாக புதிய செயல் முறையை கண்டுபிடித்துள்ளேன். ஒரு கிலோ நூல் பண்டலுக்கு சாயமிட, 70 முதல், 100 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். கழிவுநீரின் அடர்த்தி, 9,000 டி.டி.எஸ்., அளவு வரும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. 'சால்ட் ப்ரீ டையிங்' எனும் புதிய தொழில் நுட்பத்தில் சாயமிட்டால், 20 முதல், 30 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகிறது. கழிவுநீரின் அடர்த்தி, 3,000 டி.டி.எஸ்., மட்டுமே வரும். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவில் தடுக்கப்படும். இதுபோல், பழைய செயல் முறையை விட, புதிய தொழில்நுட்ப முறையில் சாயமிட்டால் செலவும், நான்கு பங்கிலிருந்து ஒரு பங்காக குறையும். இவ்வாறு, அவர் பேசினார். அரசு அலுவலர் பெரியசாமி, நிர்வாகிகள் பிரபாகரன், கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X