வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகாய், ராஜ்யசபாவில் நியமன எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இன்று (மார்ச் 19) பதவியேற்ற அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்கட்சியினர், விரைவில் தன்னை வரவேற்பார்கள் என ரஞ்சன் கூறியுள்ளார்.

இந்தியாவின் 46வது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ரஞ்சன் கோகாய், பல முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளார். குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து தீர்ப்பளித்தார். இவர் கடந்தாண்டு நவ.,17 ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், ராஜ்யசபா நியமன எம்பி., பதவிக்கு ரஞ்சன் கோகாயை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.

இன்று (மார்ச் 19) பார்லி.,யில் பதவியேற்பின் போது காங்., சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அவர்கள் அனைவரும் 'அவமானம்' என தொடர்ந்து குரல் எழுப்பி, அவையில் இருந்த வெளிநடப்பு செய்தனர். இந்த அமளிக்கு இடையே பதவியேற்ற ரஞ்சன் கோகாய், 'அவர்கள் விரைவில் என்னை வரவேற்பார்கள்' என கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE