நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடலாம்: டில்லி கோர்ட் உறுதி

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (27+ 20)
Share
Advertisement
NirbhayaCase, NirbhayaConvict, Hanging, Delhi, Court, டில்லி, கோர்ட், நிர்பயா, வழக்கு, தூக்கு, குற்றவாளிகள்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : 'நிர்பயா' வழக்கு குற்றவாளிகளை நாளை (மார்ச் 20) தூக்கிலிட தடையில்லை என டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, வினய் சர்மா, 26, பவன் குப்தா, 25, அக்ஷய் குமார் சிங், 31, ஆகிய நான்கு பேருக்கும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று முறை, துாக்கு தண்டனைக்கான தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.


latest tamil news


இந்நிலையில், டில்லி விசாரணை நீதிமன்றத்தில், குற்றவாளி முகேஷ் குமார் சிங், நேற்று முன்தினம், ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில்,'பலாத்காரம் நடந்த, 2012, டிசம்பர், 16ம் தேதி, நான் டில்லியிலேயே இல்லை.'ஆகையால், எனக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றம், அம்மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், நேற்று முகேஷ் மேல்முறையீடு செய்தார். இதில், டில்லி அரசு மற்றும் முகேஷ் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பிரிஜேஷ் சேதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


latest tamil news


இந்நிலையில், தங்கள் கோரிக்கை மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும், தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரியும் குற்றவாளிகள் தரப்பில் டில்லி பாட்டியாலா கோர்ட்டில் முறையிட்டனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றவாளிகளின் அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால், நாளை காலை 5:30 மணிக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தடையில்லை என உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (27+ 20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nandha -  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-202021:54:07 IST Report Abuse
Nandha nadakkuma
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
19-மார்-202021:43:12 IST Report Abuse
Krishna WHILE Quick & Maxm Punishment (incl. Death) to Real Accused (Instead of Scape-Goats propped-up to Cover-Up natural Failures of Police Investigations) through Fast-Track But Neutral-UNBIASED Investigation & Courts (possible within 06months) is to be Done, SIMULTANEOUSLY, Conspiratorial & Vested False Complainants (Anti-Men Women Fanatics Etc), News Hungry-Media (False-Propagandas with Sensational News), Cheap-Dirty Politicians (Diverting People From Main Issues), Anti-People & Pro-Ruler Officials (incl. Police etc who Never Detect-Punish False Complainants But Cook-up Cases incl. Media MalPropaganda), Must also be Fast PUNISHED IN SAME TRIALS. Since V.Long, Courts have Lost Supreme People’s Confidence for NEUTRAL-UNBIASED JUSTICE Due to their Extreme Bias With Complainants, Police, Officials, Media, RULERS Just for their Selfish-Vested Interests (Criminal Case Hungriness for Increasing their Strength, Pay & Promotions, Power, Advocates Livelihood etc).
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
19-மார்-202021:33:23 IST Report Abuse
தமிழ்வேள் இவர்களை இப்போதே கை கால்களை உடைத்து மூலையில் எறும்பு புற்றில் தள்ளவேண்டும் இரவு முழுதும் எறும்பு கடி வாங்கியபின் நாளை காலையில் அப்படியே தூக்கி தூக்கிலேற்றவேண்டும் .....ஏதாவது கூப்பாடு போட்டால் வாயிலும் மூக்கிலும் ஆசிட் ஊற்றி விடவேண்டும் ....இவர்கள் பிணங்களை முதலைகளுக்கு இரையாக்கிவிடலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X