2.5 கோடி பேருக்கு வேலை போகும்: ஐ.நா., அபாய மணி

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

ஜெனிவா: கொரோனா வைரஸ் பாதிப்பால், உலக அளவில், 2.5 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.


latest tamil news



ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதாரமும் சரிவடைந்துள்ளது. கொரோனா பீதியால் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வகையில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலையும் மோசமாகச் சரிந்துள்ளது. அனைத்து நாடுகளிலும் உள்நாட்டு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் 2.5 கோடி மக்கள் வேலைகளை இழக்க வாய்ப்புள்ளது; 3.40 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமான இழப்பும் ஏற்படும்.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் வேலை இழப்புகளைச் சரிசெய்ய, சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் விரைவில் ஒன்றிணைந்து, கூடிப்பேசி கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். அதன் மூலம் இந்த மதிப்பீட்டு எண்ணிக்கையை, குறைக்க முடியும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.



latest tamil news



'இந்தியா முழுவதும் கொரோனா பீதியால், பல்வேறு நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன. ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தமது உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. இதனால், இந்தியாவில் மட்டும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இன்றி, வீடுகளில் முடங்கியுள்ளனர். இதே நிலை நீடித்தால் கடும் பொருளாதார நெருக்கடியில் பல குடும்பங்கள் சிக்க நேரிடும்' என, பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-மார்-202007:03:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அலோ, ஐநா தலைவரா? எல்லாரையும் இந்தியாவுக்கு வர சொல்லுங்க.. அண்ணாத்தே மோடி ஓரே வருஷத்திலே அம்புட்டு பேருக்கும் வேலை போட்டு தந்துடுவார்.. கவலையே வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
20-மார்-202001:14:17 IST Report Abuse
Ab Cd எங்கள் நாட்டில் இந்த கொரோன ஐந்து வருடங்களுக்கு முன்பே வேலையை தொடங்கி விட்டது
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-மார்-202023:18:57 IST Report Abuse
Rajagopal இதுதான் முதல் தரமாக உலகம் முழுவதையும் ஒரு குறுகிய கால கட்டத்திற்குள் பாதித்திருக்கிறது. இதன் விளைவு எப்படிப் போகும் என்பதை கணிப்பது கடினம். எத்தனை வாரங்களுக்கு வேலையை நிறுத்தி வைக்க முடியும்? எல்லா நாடுகளிடமும் இந்த நோயைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் வேண்டிய வசதிகள் கிடையாது. பொருளாதார வீழ்ச்சியால் எல்லா நாடுகளாலும் சுதாரித்துக்கொண்டு மீள முடியாது. புரட்சியும் கலவரமும் வெடித்தாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது. இந்த நோயிலிருந்து உண்மையிலேயே மீண்டு விட்டோமா, இல்லை இதுத் திரும்பத் தாக்குமா என்று எவருக்கும் தெரியாது. எப்படி பயங்கரவாதத்தினால் உலகில் இருக்கும் விமான நிலையங்கள் எல்லாவற்றிலும் பாதுகாப்பு சோதனைகள் கடுமையாகி விட்டனவோ, அதை போல இனிமேல் பிரயாணம் செய்பவர்களின் உடல் ஆராக்கியத்தை வேகமாகப் பரிசோதிக்கும் கட்டாயம் ஏற்படும். வியாதியஸ்தர்கள் எல்லோருடனும் பயணிக்கக் கூடாது, அவர்களுக்கென்று தனியாக ஏற்பாடுகள் என்றெல்லாம் வர இருக்கிறது. பிரயாணம் செய்வதே வேறு ஒரு நிலைக்கு செல்ல இருக்கிறது. தீண்டாமை மீண்டும் வர இருக்கிறது. தீண்டாமை வந்ததே இந்த மாதிரி அடிக்கடி வந்ததால்தான். அந்தக் காலத்தில் மரணங்கள் அதிகம். நோய்களுக்கு குணமளிக்கும் மருந்துகள் கிடையாது. இருந்தாலும் அனைவருக்கும் கிடைக்கும் வழி இருந்ததில்லை. அதனால் சமூக அளவில் பல மரபுகளைக் கொண்டு வந்தார்கள். அதுவே காலப் போக்கில் கொடூரமானதாக மாறி விட்டது. இப்போது வேறு ஒரு வழியில் அதே தீண்டாமை, தீட்டு போன்றவை வரும். வேறு வழி இல்லை. இந்தியா சுகாதாரத்தில் முன்னேறா விட்டால், இந்தியர்களிடமிருந்து விலகி நில்லுங்கள் என்ற எச்சரிக்கை வரலாம். வருந்திப் பயனில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X