பொது செய்தி

தமிழ்நாடு

'கூலித் தொழிலாளர்களுக்கு உணவளிப்பது சமூகத்தின் பொறுப்பு:' சத்குரு

Added : மார் 19, 2020
Share
Advertisement
கோவை: 'கொரோனா அச்சுறுத்தலால், வேலை இழந்து தவிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு' என, சத்குரு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பீதியால், பங்வேறு தொழில் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தமது உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. இதனால், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இன்றி,

கோவை: 'கொரோனா அச்சுறுத்தலால், வேலை இழந்து தவிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு' என, சத்குரு தெரிவித்துள்ளார்.


latest tamil news



உலகம் முழுவதும் கொரோனா பீதியால், பங்வேறு தொழில் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தமது உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. இதனால், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இன்றி, வீடுகளில் முடங்கியுள்ளனர்; பல கோடி தினக் கூலித் தொழிலாளர்களும் வருவானத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
இதில், அதிகம் கண்டுக்கொள்ளப்படாமல் இருக்கும், தினக் கூலித் தொழிலாளர்கள் மீது, உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, தனது டுவிட்டர் பதிவு மூலம் வலியுறுத்தியுள்ளார், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு.




latest tamil news



'தினக் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, கொரோனா வைரஸ் பாதிப்புகளில் மிக மோசமான ஒன்றாகும். உணவின்றி அவதியுறுவது உள்நாட்டு சண்டைகளுக்கும், இறப்புகளுக்கும் வழிவகுக்கும். அவர்களுக்கு தினசரி உணவையேனும் வழங்குவது இந்த சமூகத்தின் பொறுப்பு. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, கொரோனா வைரஸ் பரவுவதை முறியடிப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை பலரும் ஏற்று பாராட்டி, கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X