பொது செய்தி

இந்தியா

திருப்பதி கோயில் மூடப்படுகிறது

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
CoronavirusOutbreakindia, Tirupati, BalajiTemple, CoronaVirus, கொரோனா, வைரஸ், திருப்பதி, ஏழுமலையான், கோயில், தேவஸ்தானம், மூடல்,

திருப்பதி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடை விதித்து கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பினர். திருப்பதிக்கு வந்த வடஇந்திய பக்தருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆந்திர அரசிடம் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


latest tamil news


ஆலோசனையின் முடிவில் ஆகம விதிக்கு புறம்பாக இல்லாதவாறு முடிவு செய்யும்படி ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஏழுமலையான் கோயில் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், ஏகாந்தமாக அனைத்து பூஜைகளும் நடைபெறும் எனவும், தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைபாதை, அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மார்கங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் அளித்து அவர்களையும் உடனடியாக திருப்பதிக்கு அனுப்பும் பணியில் இறங்கியுள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
20-மார்-202009:33:54 IST Report Abuse
Thirumal Kumaresan கோவில் மூட படுகிறது என்பது தவறான தலைப்பு,பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதே சரி.திருத்தி கொண்டால் சந்தோசம்.
Rate this:
Cancel
Uthiran - chennai,இந்தியா
20-மார்-202009:28:33 IST Report Abuse
Uthiran . கோவில் மூடப்பட்டது என்றால் கோவிலில் பூஜைகளும் நிறுத்தப்பட்டது என்பதாக அர்த்தம் வருகிறது. பக்தர்கள் தரிசனத்திற்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர கோவிலில் நித்ய பூஜைகள் நிறுத்தப்படவில்லை.
Rate this:
Cancel
Rajesh - Kolkata,இந்தியா
20-மார்-202007:43:44 IST Report Abuse
Rajesh Temple is not closed, only darshan for devotees is closed
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X