பொது செய்தி

இந்தியா

குழந்தைகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுரை

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக குழந்தைகள், முதியவர்களை வீட்டிலேயே இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
CoronavirusOutbreakindia, COVID2019india, CoronaVirusUpdate, CoronaVirus, COVID19, India, கொரோனா வைரஸ், மத்திய அரசு, அறிவுறுத்தல், கோவிட்19,

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக குழந்தைகள், முதியவர்களை வீட்டிலேயே இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் மார்ச் 22ம் தேதி முதல் மார்ச் 29 வரை வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


மேலும், நாடு முழுவதும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், அவசர பணிகள் தவிர மற்ற தனியார் துறை பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ரயில், விமானங்களில் மாணவர்கள், நோயாளிகள் தவிர மற்றவர்களுக்கு பயணச் சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-202011:31:59 IST Report Abuse
ஆப்பு நடு வயது ஆளுங்கதான் பிரச்சனை போலிருக்கு.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
20-மார்-202007:24:23 IST Report Abuse
வல்வில் ஓரி அது மனுஷனை திங்கும் வைரசுன்னு சொல்லி குடுத்திருக்காப்ல
Rate this:
Cancel
kum - paris,பிரான்ஸ்
20-மார்-202002:27:51 IST Report Abuse
kum அப்பிடின்னா அப்பா அம்மாவுக்கு வந்தா பசங்களுக்கு வராது. அறிய கண்டுபிடிப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X