கமல்நாத் அரசு நம்பிக்கை ஒட்டெடுப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
கமல்நாத் அரசு நம்பிக்கை ஒட்டெடுப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி : மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் அரசு மீது நாளை (மார்ச் 20) நம்பிக்கை ஒட்டெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. மூத்த தலைவரான, ஜோதிராதித்ய சிந்தியா, கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அதையடுத்து, அவருடைய ஆதரவாளர்களான, 22 காங்., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அதில், ஆறு பேரின் ராஜினாமாவை சபாநாயகர் பிரஜாபதி ஏற்றுக் கொண்டார்.


latest tamil news


இந்த ராஜினாமாக்களால், முதல்வர் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.,முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராஜினாமா செய்த 16 காங்., எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் கமல் நாத் அரசு சட்டசபையில் நம்பிக்கை ஒட்டெடுப்பு நடத்தி பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: முதல்வர் கமல்நாத் அரசு சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஓட்டெடுப்பு குறித்து நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். ராஜினாமா செய்த 16 காங்.எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டெடுப்பில் பங்கேற்க விரும்பினால் மாநில காவல்துறை உரிய பாதுகாப்பு தர வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S A Sarma - Hyderabad,இந்தியா
20-மார்-202009:14:45 IST Report Abuse
S A Sarma கொரானா வைரஸ் சுட்டி காட்டி, காங்கிரஸ் வக்கீல்கள் உயர்நீதி மன்றம் செல்வார்கள்.
Rate this:
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
20-மார்-202007:55:51 IST Report Abuse
C.Elumalai ஒரிரு வழிகளில் வரும்படியை, அடைத்தால், எப்படி சோனியா குடும்பத்தார்கள்,மனகுமறல்.
Rate this:
Cancel
வலதுசாரி மனிதன் மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து கொண்டு இருந்த ராயல்டி இனி வராது, ராபட் வதோரா மச்சான், மாமியார் விரக்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X