பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வாரச்சந்தைகள், கோயில்களை மார்ச்31 வரை மூட உத்தரவு

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
kovil, markets, கோயில்கள்,வாரச்சந்தைகள், மூட உத்தரவு

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழகத்தில் நாளை (மார்ச் 20) முதல்
மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து வாரச்சந்தைகளை மூடவும், கோயி்ல்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 180 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 31 வரை தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் என கல்வி நிறுவனங்களை மூட ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.


latest tamil news



இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக இன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து வாரச்சந்தைகளை மூட வேண்டும். தவிர பெரிய ஜவுளிகடைகள், பல்பொருள் அங்காடிகள், பெரிய நகை கடைகள் ஆகியன நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை மூட வேண்டும். ஆனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய், கனி கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும்.


கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் தரிசனம் ரத்து


மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், தஞ்சை பெரிய கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
20-மார்-202010:44:43 IST Report Abuse
vbs manian கற்பூரம் வாங்க கூட காசில்லாத பல கோயிலகள் உள்ளன .இன்றும் சிலருக்கு மன நிம்மதியை தரும் இவற்றை மூட வேண்டாம்.
Rate this:
Share this comment
Ramesh - Coimbatore,இந்தியா
20-மார்-202011:40:26 IST Report Abuse
Rameshமனநிம்மதியோட சாகறதுக்கா? இந்த மாதிரி கிறுக்குத்தனமெல்லாம் பண்ணாம அவரவர் வீட்டுல சாமி கும்பிட்டா போதும்....
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
20-மார்-202009:49:08 IST Report Abuse
Indhuindian மதம் சார்ந்த எதையும் கிண்டல் செய்யும் நம்முடைய திராவிட பாசறைக்காரர்கள் சும்மா இருப்பது ஏனோ. இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஐம்பது நூறு பேரை கூட்டிக்கொண்டு ஸ்ரீமான் வீரமணி தலைமையில் தளபதி, வைகோ, சீமான், திருமா, திரு முருகன் காந்தி, சுப வீர பாண்டியன் மற்றும் அவர்களின் இஸ்லாமிய கிருத்துவ நண்பர்களுடன் போராட்டம் செய்ய வேண்டும். அப்படி செய்து தாங்கள் பகுத்தறிவு வாதிகள்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். மோடிஜிதான் இருபது ரெண்டாம் தேதி வீட்டுக்குள்ளே இருங்கன்னு சொல்லிருக்காரே அதனாலே இந்த போராட்டத்தை அன்று நடத்தினால் ஒரே கல்லில் ரெண்டு மங்க - ஒன்று மோடி எதிர்ப்பு இன்னொன்று பகுத்தறிவு ஆதரிப்பு
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
19-மார்-202023:12:25 IST Report Abuse
அசோக்ராஜ் கோவிலுக்கு தடை. சர்ச்சு, மஜூதிக்கு வேண்டுகோள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X