தமிழகத்தில் வாரச்சந்தைகள், கோயில்களை மார்ச்31 வரை மூட உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வாரச்சந்தைகள், கோயில்களை மார்ச்31 வரை மூட உத்தரவு

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (8)
Share
kovil, markets, கோயில்கள்,வாரச்சந்தைகள், மூட உத்தரவு

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழகத்தில் நாளை (மார்ச் 20) முதல்
மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து வாரச்சந்தைகளை மூடவும், கோயி்ல்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 180 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 31 வரை தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் என கல்வி நிறுவனங்களை மூட ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.


latest tamil news



இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக இன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து வாரச்சந்தைகளை மூட வேண்டும். தவிர பெரிய ஜவுளிகடைகள், பல்பொருள் அங்காடிகள், பெரிய நகை கடைகள் ஆகியன நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை மூட வேண்டும். ஆனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய், கனி கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும்.


கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் தரிசனம் ரத்து


மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், தஞ்சை பெரிய கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X