பொது செய்தி

இந்தியா

மார்ச்-22 ம் தேதி யாரும் வெளியே வர வேண்டாம்:மோடி வேண்டுகோள்

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement

புதுடில்லி: மார்ச் 22 ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.latest tamil newsகொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:


கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லவேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். கொரேனா வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது என எண்ண வேண்டாம். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம். மக்களுக்காக , மக்களே சுயமாக ஊரடங்கு நடைமுறையை பின்பற்றுவோம்.


latest tamil news22 ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டின் முன்னால் அத்தியாவசிய சேவை செய்வோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிரானக நடத்தப்படும் போராட்டம் அன்று இந்தியாவின் சோதனை ஓட்டமாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம்.
தேவையின்றி மருத்துவமனைகளில் குவியாமல் பதற்றத்தை தவிர்க்க வேண்டும். மக்கள் விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும். அலட்சியம் கூடாது.கொரோனா வரைஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது.மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.

அத்தியாவசிய சேவையை செய்பவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுகிழமை வெளியே வர வேண்டாம். மருத்துவர்கள் ஊடகத்துறையினர் போக்குவரத்து துறையினருக்கு மற்றவர்கள் தொந்தரவு தர வேண்டாம். நோய்க்கு ஆளாகாதீர்கள் .நோய்களை பரப்பாதீர்கள் . பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி கூறுங்கள். இவ்வாறு பிரதமர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
20-மார்-202004:37:05 IST Report Abuse
Visu Iyer 22 தேதி என்று எதன் அடிப்படையில் இவர் சொல்கிறார்.. ஏதாவது திட்டம் இருக்குதா.. இத்தனை நாளுக்கு பிறகு இது இருக்காது என்று எப்படி இவ்வளவு உறுதியாக மாலை 5 மணி வரை என்பது போல சொல்கிறார்.. ஏதாவது புரிகிறதா..
Rate this:
Share this comment
Cancel
19-மார்-202023:09:21 IST Report Abuse
ஆப்பு பொருளாதார மந்த நிலைங்கறது பங்குச் சந்தை விழுந்தாத்தான் ஒத்துப்பாங்க. இல்லேன்னா, 8 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு பொருளாதாரம் ஒசந்து சூப்பரா வளர்ந்திருக்குன்னுல்ல சொல்லிக்கிட்டிருந்தாங்க.
Rate this:
Share this comment
Cancel
19-மார்-202023:08:18 IST Report Abuse
தமிழ்வேல் அவரு என்ன சொல்றாருன்னு புரிஞ்சுக்காம சில ஆப்பாயில்க ஒளர்றத பாத்தா... இந்தியால மட்டும்தான், அதுவும் டுமில்ஸ் phd வாங்கிருவானுவ இதுல.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-மார்-202002:37:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்மைக்கு கையிலே கொடுத்தா ஏன்னா வேண்டுமானாலும் சொல்லலாம், அதை கேள்வி கேக்காமே கேக்குறதுக்கு அடிமைகளும், அல்லக்கைகளும் இருக்காங்க என்கிற மிதப்பு தான் இப்படி செய்ய சொல்கிறது. அவசரத்துக்கு போறவனை கூட சங்கிகள் என்ன செய்யபோகுறார்களோ.. மாட்டை ஓட்டிக்கிட்ட போனவனை அடிச்சி கொன்ன கூட்டமாச்சே அதான் கேக்குறாங்க....
Rate this:
Share this comment
20-மார்-202007:24:23 IST Report Abuse
தமிழ் ஒரு பெரிய பதவியில் இருப்பவர்கள் இந்த மாதிரி விஷயங்களில் ஏன் எதற்கு எப்படி என்று மக்களுக்கு விளக்கி சொல்ல வேண்டும். அதுவும் பிரதமரே சொல்லும்போது கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி மக்கள் புரிந்துகொள்வார்கள். பிரதமர் சொன்னது முழுமையடையவில்லை என்பது உனக்கு தெரியுமா.அதைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். உன்னுடைய மண்டைக்குத்தான் உரைக்கவில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X