பொது செய்தி

இந்தியா

'கொரோனா' வைரஸ் எதிரொலி: 31ம் தேதி வரை, 155 ரயில்கள் ரத்து

Updated : மார் 21, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
'கொரோனா' வைரஸ் ,எதிரொலி,31ம் தேதி வரை, 155 ரயில்கள்  ரத்து

புதுடில்லி 'கொரோனா' வைரஸ் பீதியால், முன்பதிவு செய்திருந்த ரயில் டிக்கெட்களை, பயணியர் ரத்து செய்து வரும் நிலையில், வரும், 31ம் தேதி வரை, 155 ரயில்களின் சேவையை, இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று, இப்போது, உலகையே பீதியடைய வைத்து உள்ளது.இந்தியாவில், கொரோனாவுக்கு, இதுவரை, 160க்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டு உள்ளனர்.'கொரோனா பரவலைத் தடுக்க, வெளிநாடுகள் மற்றும் வெளியூர் பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்; கூட்டம் கூடுவதையும், விழாக்களில் பங்கேற்பதையும் அவர்கள் தவிர்க்க வேண்டும்' என, மத்திய மற்றும் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. இதையடுத்து, ரயில்களில் பயணம் செய்ய, முன்பதிவு செய்திருந்த பயணியர் பலர், அதை ரத்து செய்துவிட்டனர்.

இம்மாதத்தில் மட்டும், 60 சதவீதத்துக்கும் அதிகமான முன்பதிவு டிக்கெட்கள், ரத்து செய்யப் பட்டுள்ளதாக, ரயில்வே தெரிவித்தது.கொரோனா பரவலை தடுக்கவும், பயணியர் எண்ணிக்கை குறைந்ததாலும், ஏற்கனவே, 71 ரயில்களின் சேவையை, ரயில்வே ரத்து செய்திருந்தது,

இந் நிலையில், நேற்று ஒரே நாளில், மேலும், 84 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய சுற்றுலா மற்றும் உணவு கழகம் இயக்கும், இரண்டு தேஜா ரயில்களும், ஹம்சபர் ரயிலும் அடங்கும். இந்த ரயில்களில், முன் பதிவு செய்திருந்த பயணியருக்கு, டிக்கெட்டுக்கான முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என, ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில்களில், 'கேன்டீன்'களில் பணி புரியும் ஊழியர்களுக்கு, மிகக் கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டவர்களை, பணிக்கு நியமிக்கக் கூடாது என, உத்தரவிடப் பட்டுள்ளது.ர யில்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து, முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு, தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


ரயிலில் இருந்து 6 பயணியர் வலு கட்டாய மாக இறக்கம்

மஹாராஷ்டிரா மாநிலத்தில்தான், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தால், அவர்களது கையில், 'வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்' என, டாக்டர்கள், 'சீல்' குத்தி விடுகின்றனர். இதனால், அவர்கள் வெளியில் சுற்றி திரிவதை தடுக்க முடியும்.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பால்கர் ரயில் நிலையத்தில், எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில், நேற்று முன்தினம், நான்கு பயணியர் ஏறினர். அவர்கள் கைகளில், 'வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்' என, சீல் குத்தியிருப்பதை பார்த்த மற்ற பயணியர் பீதியடைந்தனர். இது பற்றி, ரயில்வே போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். ரயிலில் இருந்து, நான்கு பயணியரையும், போலீசார் வலுக்கட்டாயமாக இறக்கினர்.
விசாரணையில், அவர்கள், ஐரோப்பிய நாடான ஜெர்மனியிலிருந்து, சமீபத்தில் திரும்பி வந்தது தெரிந்தது.இதேபோல், மும்பையிலிருந்து, குஜராத் மாநிலம், வதோதரா செல்லும், சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று காலை, ஆறு பயணியர் ஏறினர். அவர்கள் கைகளிலும், 'வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்' என, சீல் குத்தியிருப்பதை பார்த்த மற்ற பயணியர், இது பற்றி, ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களும், ரயிலில் இருந்து வலுகட்டாயமாக இறக்கப்பட்டனர். விசாரணையில், அவர்கள், சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பியுள்ளது தெரிந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
20-மார்-202019:55:19 IST Report Abuse
K.Sugavanam சர்வீஸ் சார்ஜ் பிடித்தமில்லாமல் முழு பயணத்தொகையும் திரும்ப கொடுத்தனரா?
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20-மார்-202004:10:53 IST Report Abuse
 nicolethomson என்ன நடக்குதுன்னு புரியவே மாட்டேங்குது
Rate this:
20-மார்-202010:18:01 IST Report Abuse
ஆப்புஎல்லாம் சூப்பரா போய்க்கிட்டிருக்குது. செத்த அமைதியா இருங்கோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X