தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரி தாக்கலுக்கு 60 நாள் அவகாசம்

Added : மார் 19, 2020
Share
Advertisement

புதுடில்லி, :அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, கடைசி வாய்ப்பாக, 60 நாள் அவகாசம் அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று செயல்படும், சில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அந்த நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

மேலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல், முறைகேடாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதும், எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.முறைகேடாக செயல்பட்ட, 14 ஆயிரத்து, 800 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத தொண்டு நிறுவனங்கள் சார்பில், 'ஆன்லைனில்' வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் பல சிக்கல் இருப்பதாக கூறி, போதிய அவகாசம் தரும்படி, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள் தெரிவித்த குறைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டன. இதன்படி, இந்த,'நோட்டீஸ்' வெளியிடப்பட்ட தேதியிலிருந்து, 60 நாட்களுக்குள், அதாவது, வரும், மே, 19 வரை, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, தொண்டு நிறுவனங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட அவகாசத்துக்குள், எப்.ஆர்.சி.ஏ., இணையதளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள அபராதத்துடன் சேர்த்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X