'சூரிய ஒளி உடலில் பட்டால் கொரோனா பாதிக்காது'

Added : மார் 19, 2020
Share
Advertisement
 'சூரிய ஒளி உடலில் பட்டால் கொரோனா பாதிக்காது'

புதுடில்லி ''நம் உடலில், 10 - 15 நிமிடங்கள் சூரிய ஒளி பட்டால், கொரோனா உள்ளிட்ட எந்த வைரசும், நம்மை பாதிக்காது,'' என, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறினார்.

பா.ஜ., வைச் சேர்ந்தவரும், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சருமான அஸ்வினி குமார் சவுபே கூறியதாவது:நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தான், கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் அதிகம் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம், இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், 'வைட்டமின் - சி' சூரிய ஒளியில் அதிகம் உள்ளது. பகல், 11:00 லிருந்து, 2:00 மணி வரை, சூரிய வெளிச்சம் பிரகாசமாக இருக்கும். அந்த நேரத்தில், நம் உடலில் சூரிய வெளிச்சம் பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொரோனா உள்ளிட்ட எந்த வைரஸ் பாதிப்பும் ஏற்படாது. இந்த விஷயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X