கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வீடு ஒப்படைக்க தாமதமானதால் நிறுவனம் இழப்பீடு தர உத்தரவு

Added : மார் 19, 2020
Share
Advertisement

சென்னை, : ஒப்பந்த காலத்துக்குள் வீடு ஒப்படைக்காத தனியார் கட்டுமான நிறுவனம், ஒன்பது பேருக்கு இழப்பீடு வழங்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி - ஆவடி சாலை, பருத்திப்பட்டு பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், 700க்கும் மேற்பட்டோர் வீடு வாங்க பணம் செலுத்தினர்.இவர்களில் பலருக்கு, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள், வீடு ஒப்படைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டோரில், 12 பேர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையிட்டனர்.

இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய விசாரணை அதிகாரி, ஜி.சரவணன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் தெரிவித்தபடி, கட்டுமான நிறுவம், வீட்டை ஒப்படைக்க தாமதம் செய்தது உறுதியாகிறது. இதில், மூன்று பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.மீதமுள்ள ஒன்பது பேரில், ஏழு பேருக்கு இழப்பீடாக, தலா, ஒரு லட்சம் ரூபாய்; வழக்கு செலவாக, 20 ஆயிரம் ரூபாய்; இரண்டு பேருக்கு இழப்பீடாக, தலா, 50 ஆயிரம் ரூபாய்; வழக்கு செலவாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X