பொது செய்தி

தமிழ்நாடு

2,900 கள உதவியாளர் வேலை : மின் வாரியம் தேர்வு அறிவிப்பு

Added : மார் 19, 2020
Share
Advertisement

சென்னை :களப் பணிகளை மேற்கொள்ளும், 2,900 கள உதவியாளர் பணிக்கு, ஆட்களை நியமிப்பதற்கான தேர்வு அறிவிப்பை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில், பொறியாளர், கணக்கீட்டாளர், உதவியாளர் என, பல பதவிகளில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருவரே, பல வேலைகளை செய்ய வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கள உதவியாளர் என்ற பதவியில், 2,900 ஊழியர்களை நியமிப்பதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மின் வாரியம், நேற்று வெளியிட்டுஉள்ளது. ஐ.டி.ஐ., முடித்தவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு, வாரிய இணையதளத்தில் விண்ணப்பிப்பது, வரும், 24ம் தேதி துவங்கி, ஏப்ரல், 23ல் முடிகிறது.உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வுகள் வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இரு தேர்வுகள் நடக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, மின் வாரியம் தெரிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X